5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கவனம் மக்களே… பெர்த் அறுந்து விழுந்து உயிரிழந்த பயணி.. காரணத்தை சொன்ன ரயில்வே நிர்வாகம்!

ரயிலின் மிடில் பெர்த் திடீரென அறுத்து விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் கூறுகையில், "உயிரிழந்ந அலிகான் கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டிருந்தார். மீடில் பெர்த்தின் செயின் சரியாக பொருத்தப்படாததால் மீடில் பெர்த்தின் இருக்கை கீழே விழுந்துள்ளது. கடைசியாக பயணித்தவர்கள் சங்கிலியை சரியாக இணைக்காததால் பெர்த்தி கீழே விழுந்துள்ளது. இருக்கை சேதம் அடைந்த நிலையில் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனம் மக்களே… பெர்த் அறுந்து விழுந்து உயிரிழந்த பயணி.. காரணத்தை சொன்ன ரயில்வே நிர்வாகம்!
ரயில்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 27 Jun 2024 18:50 PM

பெர்த் அறுந்து விழுந்து உயிரிழந்த பயணி: ரயிலின் மிடில் பெர்த் திடீரென அறுத்து விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாரஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அலிகான் (62). இவர் எல்ஐசி முகவராக பணிாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 15ஆம் தேதி தனது நண்பர் முகமது என்பவருடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்குப் எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயிலில் பயணித்தார். இவர்கள் இருவரும் அவர்களுக்கென முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினர். அலிகான் மற்றும் அவரது நண்பர் முகமது ஆகிய இருவருக்கு கீழ் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. கீழ் பெர்த்தில் அலிகான் படுத்திருந்தார். மிடில் பெர்த்தில் வேறொரு படுத்திருந்தார். அப்போது, ரயில் தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மிடில் பெர்த்து கீழே படுத்திருந்த அலிகான் மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும், மிடில் பெர்த்தில் படுத்திருந்தவரும் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கிறது- இதனை அடுத்து, சக பயணிங்கள் ரயில்வே அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், வாரங்கல் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த படுகாயம் அடைந்த அலிகானை மீட்ட அதிகாரிகள் வாரங்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Also Read: திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா? சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரபரப்பு விளக்கம்!

ரயில்வே நிர்வாகம் விளக்கம்:

அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலிகானுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் கூறுகையில், “உயிரிழந்ந அலிகான் கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டிருந்தார். மீடில் பெர்த்தின் செயின் சரியாக பொருத்தப்படாததால் மீடில் பெர்த்தின் இருக்கை கீழே விழுந்துள்ளது. கடைசியாக பயணித்தவர்கள் சங்கிலியை சரியாக இணைக்காததால் பெர்த்தி கீழே விழுந்துள்ளது. இருக்கை சேதம் அடைந்த நிலையில் இல்லை. எனவே, சங்கிலியை சரியாக மாட்டாத சென்றதால் தான் அலிகான் உயிரிழந்துள்ளர்” என தெரிவித்துள்ளது.

Also Read: நீட் வினாத்தாள் கசிவு.. பீகாரில் 2 பேர் கைது.. அதிரடி காட்டும் சிபிஐ!

Latest News