5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TV9 Festival of India: மக்களே ரெடியா? இன்று தொடங்கும் டிவி9 துர்கா பூஜை திருவிழா.. 250 ஸ்டால்கள், இசை நிகழ்ச்சி என எல்லாம் ஒரே இடத்தில்..

250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தயாரிப்புகளின் கண்காட்சிகள், உணவு, நேரடி இசை மற்றும் பல விஷயங்களை கண்காட்சியில் அனுபவிக்க முடியும். கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட டிவி9 விழா பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த முறையும் மக்களுக்காக பல புதிய விஷயங்களை டிவி9 தயார் செய்துள்ளது. மேலும், டில்லியில் மிகப்பெரிய துர்கா பூஜை நடைபெறும் இடமாகவும் டி.வி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா உள்ளது. துர்கா பூஜை தொடர்பான கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TV9 Festival of India: மக்களே ரெடியா? இன்று தொடங்கும் டிவி9 துர்கா பூஜை திருவிழா.. 250 ஸ்டால்கள், இசை நிகழ்ச்சி என எல்லாம் ஒரே இடத்தில்..
டிவி9 ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 09 Oct 2024 08:01 AM

டிவி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியாவின் இரண்டாவது பதிப்பு, அதன் பன்முகத்தன்மை மற்றும் பிரமாண்டத்திற்கு பிரபலமானது. இந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இந்த திருவிழா உற்சாகம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பண்டிகைக்காக அறியப்படுகிறது. இந்த திருவிழாவை 2024 அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு புது டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே உள்ள மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு தருணங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி கொண்டுவருகிறது. விழாவின் ஒரு பகுதியாக டிவி9 பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சியின் ஒரு பகுதியாக உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது.

250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தயாரிப்புகளின் கண்காட்சிகள், உணவு, நேரடி இசை மற்றும் பல விஷயங்களை கண்காட்சியில் அனுபவிக்க முடியும். கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட டிவி9 விழா பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த முறையும் மக்களுக்காக பல புதிய விஷயங்களை டிவி9 தயார் செய்துள்ளது. மேலும், டில்லியில் மிகப்பெரிய துர்கா பூஜை நடைபெறும் இடமாகவும் டி.வி9 ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா உள்ளது. துர்கா பூஜை தொடர்பான கண்காட்சியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிற்பங்கள், பக்தி இசை என பார்வையாளர்களின் கண்களையும் மனதையும் குளிர்விக்கும் காட்சிகளை டிவி9 வைத்திருக்கிறது.

Also Read: ஆயுதபூஜை கொண்டாடப்படுவது ஏன்? – எப்படி கொண்டாட வேண்டும்?

நிகழ்ச்சி நிரல்:

அக்டோபர் 9 (மஹாசஷ்டி): தேவிபோதனா மற்றும் விழாவின் தொடக்க விழா
அக்டோபர் 10 (மகா சப்தமி): நவபத்ரிகா பிரவேசத்துடன் பூஜை, சக்ஷுதன ஆரத்தி மற்றும் புஷ்பாஞ்சலி
அக்டோபர் 11 (மகா அஷ்டமி): சோந்தி பூஜை மற்றும் போக் ஆரத்தி
அக்டோபர் 12 (மகாநவமி மற்றும் பிரசாதம்): வினியோகம்
அக்டோபர் 13 (விஜயதசமி) : குங்குமப்பூ ஆட்டம் மற்றும் அம்மன் வழிபாட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

250 ஸ்டால்கள்:

துர்கா பூஜையுடன் தொடர்புடைய கொண்டாட்டங்கள் தவிர, மக்கள் இந்த முறை ஷாப்பிங் செய்து மகிழலாம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. வாழ்க்கை முறை, ஃபேஷன், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பலவற்றை இங்கே கண்டு களிப்பதோடு, மிகவும் பிடித்தவை வீட்டிற்கு வாங்கிச் செல்லலாம்.

Also Read: மேஷம் முதல்‌ கன்னி ராசி வரை.. நவராத்திரி ராசிபலன்கள் இதோ!

இதுமட்டுமின்றி, வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர்களுக்கும் தனித்தனி ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆடைகளும் இங்கு கிடைக்கும். விதவிதமான சுவை கொண்ட உணவுகளையும் உண்டு மகிழலாம். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதுதான் இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம். உள்நாடு மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இசை ஆர்வலர்களுக்கு நேரடி இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூஃபி, பாலிவுட் ஹிட்ஸ் அல்லது நாட்டுப்புற பாடல்கள் என எல்லா விதமான இசை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் அக்டோபர் 9 முதல் 13 வரை நடைபெறும் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Latest News