Budget 2024 Cheaper and Costlier Items: செல்போன் முதல் வைரம் வரை.. பட்ஜெட் அறிவிப்பால் விலை குறையும் பொருட்கள் எவை தெரியுமா?
இன்றைய பட்ஜெட் தாக்கலில் பள்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக 25 முக்கியமான கனிமங்களுக்கு அரசு சுங்க வரி விலக்கு அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் துணைப் பொருட்கள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், புற்றுநோய் மருந்துகள் போன்ற பொருட்களின் விலை கணிசமாக குறையும்.
பட்ஜெட் எதிரொலி – விலை குறையும் பொருட்கள்: 2024 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலுக்கு பின் பல்வேறு பொருட்களில் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் செல்போன் விலை குறையும் என கூறப்படுகிறது. புற்றுநோய் மருந்துகள் மற்றும் மொபைல் போன்களுக்கான சுங்க வரி கணிசமாக குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அதன்படி இந்த பொருட்களுக்கான சில்லறை விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, தோல் பொருட்கள் மற்றும் கடல் உணவுகளின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமறி வரி ஏற்கனவே 15% வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதை வெறும் 6% ஆக குறைத்து அறிவித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கான பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றதால் ஜூலை மாத்ததில் மத்திய முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: தங்கம் முதல் வருமான வரி வரை.. பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய டாப் தகவல்கள்
இன்றைய பட்ஜெட் தாக்கலில் பள்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக 25 முக்கியமான கனிமங்களுக்கு அரசு சுங்க வரி விலக்கு அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் துணைப் பொருட்கள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், புற்றுநோய் மருந்துகள் போன்ற பொருட்களின் விலை கணிசமாக குறையும். ஃபெரோ நிக்கல் மற்றும் ப்ளிஸ்டர் காப்பர் மீதான அடிப்படை சுங்க வரிகளையும் அரசாங்கம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்மோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரியை 10% மற்றும் மக்காத பிளாஸ்டிக்கின் மீதான விகிதத்தை 25% உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, சில தொலைத்தொடர்பு சாதனங்களில் அடிப்படை சுங்க வரி 10% முதல் 15% வரை உயர்த்தப்படுவதால் தொலைத்தொடர்பு தயாரிப்புகள் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் விலையும் உயரும்.
முந்தைய பட்ஜெட்டில், இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், கேமரா லென்ஸ்கள் உட்பட பல பாகங்கள் மீதான இறக்குமதி வரிகளை நிதி அமைச்சர் குறைத்தார். கூடுதலாக, தொலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு முக்கியமான லித்தியம்-அயன் பேட்டரிகள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தங்கம் வெள்ளி விலை அதிரடியாக சரிவு.. பட்ஜெட் எதிரொலியாக சர்ரென சரிந்த ரேட்!