5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024 Angel Tax : ஏஞ்சல் வரி என்றால் என்ன? பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டதால் யாருக்கு லாபம்?

ஏஞ்சல் வரி என்பது ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ஸ்டார்ட்அப்கள் பெறும் நிதியின் மீது விதிக்கப்படும் வரியாகும், குறிப்பாக முதலீட்டுத் தொகை ஸ்டார்ட்அப் பங்குகளின் நியாயமான சந்தை மதிப்பை மீறும் போது. இந்தியாவில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் பணமதிப்பழிப்பைத் தடுப்பதற்காக 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

Budget 2024 Angel Tax : ஏஞ்சல் வரி என்றால் என்ன? பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டதால் யாருக்கு லாபம்?
மாதிரி புகைப்ப்டம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Jul 2024 14:01 PM

ஏஞ்சல் வரி: ஒரு இந்திய முதலீட்டாளரிடமிருந்து பட்டியலிடப்படாத நிறுவனங்கள் பங்குகளை வெளியிடுவதன் மூலம் திரட்டப்பட்ட மூலதனத்திற்கு ஏஞ்சல் வரி விதிக்கப்படுகிறது. அந்த வரியை முற்றிலும் ரத்து செய்வதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏஞ்சல் வரி என்பது ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ஸ்டார்ட்அப்கள் பெறும் நிதியின் மீது விதிக்கப்படும் வரியாகும், குறிப்பாக முதலீட்டுத் தொகை ஸ்டார்ட்அப் பங்குகளின் நியாயமான சந்தை மதிப்பை மீறும் போது. இந்தியாவில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் பணமதிப்பழிப்பைத் தடுப்பதற்காக 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது. பெறப்பட்ட தொகைக்கும் நியாயமான சந்தை மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் வருமானமாகக் கருதப்பட்டு அதற்கேற்ப வரி விதிக்கப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கான பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றதால் ஜூலை மாத்ததில் மத்திய முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: தங்கம், வெள்ளி வரி குறைப்பு.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

இன்றைய பட்ஜெட்டில் முக்கியமாக ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, சிக்கலாக அமையும் என தெரிவிக்கின்றனர். ஏனெனில் ஆரம்ப நிலை முதலீடுகள் பெரும்பாலும் தற்போதைய மதிப்பை விட எதிர்கால திறனை அடிப்படையாகக் கொண்டவை, இதனால் மதிப்பீடுகளை நியாயப்படுத்துவது கடினம். இதன் விளைவாக, ஸ்டார்ட்அப்கள் குறிப்பிடத்தக்க வரிப் பொறுப்புகளைச் சந்திக்க நேரிடும், இது அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம் மேலும் முதலீட்டாளர்கள் பங்கு பெறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் ஸ்டார்ட்அப்களுக்கு மிகவும் சாதகமான சூழலை மேலும் மேம்படுத்துவதற்காக ஏஞ்சல் வரியை நீக்க வேண்டும் என்று துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கோரினர். அந்த வகையில் இந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும். மோடியின் முதல் பட்ஜெட் 3.0 வேலைவாய்ப்புகள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறையில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.

ஏஞ்சல் வரி ரத்து மற்றும் முத்ரா கடன் வரம்புகள் அதிகரிப்பு ஆகியவை ஸ்டார்ட்அப்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். முத்ரா திட்டம் வருமானம் ஈட்டும் குறுந்தொழில்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

மேலும் படிக்க: மாதச் சம்பளம் வாங்குபவர்கள் எவ்வளவு வரி கட்டணும்? பட்ஜெட் அறிவிப்பில் வெளியான தகவல்!

 

Latest News