5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“மனைவியுடன் கட்டாய உறவு குற்றமல்ல” உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் கணவர் ஈடுபடுவது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மனைவியின் விருப்பமின்றி கணவர் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு நேற்று மத்திய அரசு பதிலளித்திருந்தது.

“மனைவியுடன் கட்டாய உறவு குற்றமல்ல” உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!
உச்ச நீதிமன்றம் (picture credit: getty)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Oct 2024 12:08 PM

மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் கணவர் ஈடுபடுவது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மனைவியின் விருப்பமின்றி கணவர் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமாக அறிவிக்க கோரிய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மனு குறித்த விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் கணவர் ஈடுபடுவதை குற்றமாக கருத தேவையில்லை. திருமண வன்கொடுமைகளை குற்றமாக்குவது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல.

“மனைவியுடன் கட்டாய உறவு குற்றமல்ல”

திருமண உறவில் பாலியல் வன்கொடுமை என்பது சட்டப்பூர்வ பிரச்சினையை விட சமூகப் பிரச்சினையாகும். , ஏனெனில் இது சமூகத்தில் நேரடி விளைவை ஏற்படுத்தும். அனைத்து மாநிலங்களின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் கணவர் ஈடுபடுவதை குற்றமாகும் என்ற முடிவு செய்ய முடியாது.

ஒரு திருமணத்தில், ஒருவரின் மனைவியிடமிருந்து நியாயமான பாலுறவு அணுகல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவுகிறது. இது போன்ற எதிர்பார்ப்புகளால் கணவன் தன் மனைவியை அவளது விருப்பத்திற்கு மாறாக உடலுறவு கொள்ள வற்புறுத்த முடியாது.
பெண்களின் அனுமதியின்றி பாலியல் உறவு கொள்ள திருமண உறவு அனுமதிக்கவில்லை.

அப்படி செய்தால் சட்டப்படி தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், திருமண உறவுக்கு வெளியே நடக்கும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் திருமண உறவில் நடக்கும் அத்துமீறல்களும் வேறு வேறு ஆனவை. ஆனால் திருமண உறவில் நடக்கும் அத்துமீறல்களுக்கு பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவது அதீதமானது.

மத்திய அரசு பதில்:

கணவருக்கும் மனைவிக்கும் இடையேயான பந்தம் என்பது பல அம்சங்களை கொண்டது. அதில் பாலியல் உறவும் ஒன்று. இந்த அம்சங்களின் அடிப்படையில் தான் திருமணம் என்ற உறவு இயங்குகிறது. இந்திய சமூக சட்ட அரங்கில் திருமணம் என்ற அமைப்பை பாதுகாக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைத்தால் அதை நீதிமன்றம் ரத்து செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

 

திருமண பந்தத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க நாடாளுமன்றம் பல்வேறு சட்ட தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்திய கதண்டனை சட்டத்தின் பிரிவுகள் 354, 354பி, 498ஏ மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பெண்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் பொருத்தமான தண்டனைத் தீர்வுகள் இருப்பதால் திருமண பலாத்காரத்தை குற்றமாக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளது.

Latest News