Train Accident: உ.பியில் தொடரும் ரயில் விபத்துக்கள்.. 7 பெட்டிகள் தடம்புரண்டு கோர விபத்து..! - Tamil News | | TV9 Tamil

Train Accident: உ.பியில் தொடரும் ரயில் விபத்துக்கள்.. 7 பெட்டிகள் தடம்புரண்டு கோர விபத்து..!

Published: 

20 Jul 2024 22:01 PM

கடந்த சில நாட்களுக்கு முன் திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி கஞ்சன் விரைவு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அசாம் வழியாக மேற்கு வங்கம் செல்லும் இந்த ரயில் அம்மாநிலத்தின் நியூஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதிவேகமாக வந்த சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின் பகுதியில் 3 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.

Train Accident: உ.பியில் தொடரும் ரயில் விபத்துக்கள்.. 7 பெட்டிகள் தடம்புரண்டு கோர விபத்து..!

ரயில் விபத்து

Follow Us On

உத்திர பிரதேசம் ரயில் விபத்து: உத்திர பிரதேசத்தில் மீண்டும் ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. காசியாபாத்-மொராதாபாத் இடையேயான அம்ரோஹா யார்டில் சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மொராதாபாத்-சஹாரன்பூர்-மீரட் காசியாபாத் இடையே மாற்றுப் பாதை ரயில்களின் இயக்கத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள்/ஊழியர்களுடன் போதிய போலீஸ் படையும் அந்த இடத்தில் இருந்ததாக அம்ரோஹா போலீசார் தெரிவித்தனர். இந்தியாவில் ரயில் விபத்துகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி கஞ்சன் விரைவு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அசாம் வழியாக மேற்கு வங்கம் செல்லும் இந்த ரயில் அம்மாநிலத்தின் நியூஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதிவேகமாக வந்த சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின் பகுதியில் 3 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வேத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also Read: குற்றாலம் தண்ணீரே வேண்டாம் என சொன்ன பிரபல நடிகை!

இந்நிலையில் இன்று உத்திர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது. இதில் சுமார் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. வடகிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் மாதூர் கூறுகையில், “ புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, சில மணிநேரங்களில், அப்லைன் மீட்டமைக்கப்படும். இன்று இரவுக்குள் மீட்பு பணிகள் முழுமையடையும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்..

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version