5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டிரக் கவிழ்ந்து விபத்து.. உடல் நசுங்கி 11 பேர் உயிரிழப்பு.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலத்தில் டிரக் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள குதர் பகுதியில் சாலையோரத்தில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அப்போது, அவ்வழியாக கற்களை ஏற்றி வந்த டிரக் பேருந்தின் மீது மோதியுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த டிரக் அந்த பேருந்தின் மீது கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 10 பேர் காயம் அடைந்துள்ளனர். 

டிரக் கவிழ்ந்து விபத்து.. உடல் நசுங்கி 11 பேர் உயிரிழப்பு.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
விபத்து
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 May 2024 08:32 AM

உத்தர பிரதேசத்தில் பயங்கரம்: நாட்டில் பல்வேறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ராஜ்கோட்டில் விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரழந்ததனர். அதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேலே உயிரிழந்தனர். அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் பொதுமக்களியே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான சூழலில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் டிரக் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள குதர் பகுதியில் சாலையோரத்தில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

11 பேர் உயிரிழப்பு:

இவர்கள் உத்தரகாண்டை நோக்கி புனிதா யாத்திரைக்காக சென்று கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் குதர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பேருந்துக்குள் சிலர் அமர்ந்திருக்க, சிலர் தாபாவில் உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக கற்களை ஏற்றி வந்த டிரக் பேருந்தின் மீது மோதியுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த டிரக் அந்த பேருந்தின் மீது கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.   இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து.. 27 பேர் உயிரிழப்பு.. குஜராத்தில் சோகம்!

 

Latest News