Watch Video: வேலையில் இருக்கும்போதே சுருண்டு விழுந்த இளைஞர்.. மாரடைப்பால் உயிரிழப்பு.. ஷாக் வீடியோ!
உத்தர பிரதேச மாநிலத்தில் அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்த 30 வயதான நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 19ஆம் தேதி நடந்த நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரசேதத்தில் அதிர்ச்சி: மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிய நோயாக இருந்தது. ஆனால, இப்போது வயது வரம்பு இல்லாமல் சிறியவர்களுக்கு கூட இந்த மாரடைப்பு ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு நிலைமை ரொம்வே மோசமாகிவிட்டது. ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்கள், குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இப்படியான சூழலில், உத்தர பிரதேச மாநிலத்தில் அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்த 30 வயதான நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 19ஆம் தேதி நடந்த நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நாற்காலியில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென நாற்காலியில் இருந்தப்படி கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு சாய்கிறார். மூச்சு விட முடியாமல் மயக்க நிலைக்கு சென்ற அவரை சக ஊழியர்கள் எழுந்து காப்பாற்ற முயல்வது போன்று வீடியோவில் உள்ளது. இதனை அடுத்து, சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்தவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
उत्तर प्रदेश : महोबा जिले के HDFC बैंक में मैनेजर राजेश शिंदे (38 वर्ष) की लैपटॉप पर काम करते–करते मौत हो गई। साथियों ने CPR दिया, लेकिन कुछ नहीं हुआ। pic.twitter.com/Xz2ItozDjj
— Sachin Gupta (@SachinGuptaUP) June 26, 2024
வீடியோ காட்சி:
உயிரிழந்தவர் ஹமிர்பூரைச் சேர்ந்த 30 வயதான ராஜேஷ் குமார் ஷிண்டே என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்ற வந்துள்ளார். இந்த நிலையில் தான், பணியில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் 15 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் வெகு நேரமாக குளித்துக் கொண்டிருந்திருந்தார். குளித்துவிட்டு நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறுவன் சில நொடிகளிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.
மேலும், கடந்த மாதம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தர பிரதேசத்தில் மீரட்டில் 18 வயது பெண் ஒருவர் தனது சகோதரியின் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மயக்கம் அடைந்து நெஞ்சில் கைவைத்தபடி மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து, சில நொடிகளிலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: “கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்” ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!