“பாஜகவுக்கு ஆதரவா?” தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. கால்வாயில் உடல் வீச்சு!

Uttar Pradesh Crime News : உத்தர பிரதேச மாநிலம் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடல் சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாஜகவுக்கு ஆதரவா?” தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. கால்வாயில் உடல் வீச்சு!

மாதிரிப்படம்

Updated On: 

22 Nov 2024 10:41 AM

உத்தர பிரதேச மாநிலம் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடல் சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கர்ஹா பகுதியில் உள்ள கஞ்சாரா நதி பாலம் அருகே இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை

அதில், கொலை செய்யப்படுவதற்கு முன் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  போலீசாரின் கூற்றுப்படி, 23 வயதான பெண் நேற்று முன்தினம் காணாமல் போனதாக தெரிகிறது. இதனை அடுத்து, நேற்று காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கத்தேரியா என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அகிலேஷ் யாதவ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்று கூறியதால் பெண் கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் குற்றச்சாட்டியுள்ளார். அதாவது, உத்தர பிரதேச மாநிலத்தில் தில்சுதேஹரி, கார்ஹல், மிராபூர், காஜியாபாத் உள்ளிட்ட 9 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

Also Read : பழங்குடி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. மலத்தை சாப்பிட வைத்த கொடூரம்… ஷாக்!

இந்த நிலையில், கர்ஹல் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அப்போது, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பிரசாத் யாதவ் என்பவர் பட்டியலின பெண்ணின் வீட்டிற்கு சென்று வாக்கு கேட்டிருக்கிறார்.

கால்வாயில் உடல் வீச்சு

அப்போது நீங்கள் யாருக்கு வாக்களிப்பூர்கள் என்று அவர்கள் கேட்க, அந்த பெண் பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தில் எங்களுக்கு வீடு கிடைத்ததால் நாங்கள் பாஜகவின் தாமரை சின்னத்திற்கு தான் வாக்களிக்க போகிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்தரம் அடைந்த பிரசாத் யாதவ், நீங்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும். பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது. மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

Also Read : மதுரையில் பயங்கரம்.. இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்!

இந்த நிலையில் தான் அந்த பெண் நேற்று முன்தினம் திடீரென காணாமல் போன நிலையில், அவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. அதாவது, கஞ்ரா ஆற்று பாலம் அருகே சந்தேகப்படும் நிலையில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாக உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டை திறந்து பார்த்தபோது பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், அகிலேஷ் யாதவ் கட்சிக்கு வாக்கு கேட்டு அந்த பெண்ணை மிரட்டிய பிரசாத் யாதவ் மற்றும் மோகன் கத்தோரியா ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!