UP Accident: உத்திர பிரதேசத்தில் லாரி மீது கார் மோதி விபத்து.. 5 மருத்துவர்கள் உயிரிழப்பு..
இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, அவர்கள் அனைவரும் லக்னோவிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களின் கார் கன்னோஜ் மாவட்டத்தின் திருவா கோட்வாலி அருகே ஆக்ரா லக்னோ விரைவுச் சாலையின் சேனல் எண் 196.200 அருகே வந்த போது விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த போது காரில் 6 பேர் இருந்தனர். இந்த கோரமான விபத்தில் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் நகரில் ஆக்ரா – லக்னோ விரைவு சாலையில் இன்று காலை பெரிய விபத்து ஒன்று நடந்தது. அதி வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்த ச்மபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரை உடைத்து முன்னால் வந்த லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொருங்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 மருத்துவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த நான்கு மருத்துவர்களும் சைஃபாயில் உள்ள மினி பிஜிஐ மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாகவும், லக்னோவில் ஒரு திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் 5 மருத்துவர்கள் உயிரிழப்பு:
தகவலின்படி, இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, அவர்கள் அனைவரும் லக்னோவிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களின் கார் கன்னோஜ் மாவட்டத்தின் திருவா கோட்வாலி அருகே ஆக்ரா லக்னோ விரைவுச் சாலையின் சேனல் எண் 196.200 அருகே வந்த போது விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த போது காரில் 6 பேர் இருந்தனர். இந்த கோரமான விபத்தில் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு மருத்துவர் படுகாயம் அடைந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் சைபாய் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Kannauj, Uttar Pradesh: A speeding car lost control on the Agra-Lucknow Expressway, collided with a truck, and killed five doctors from Saifai Medical College. One other person was injured. The accident occurred near the 196-kilometer mark in Tirwa Kotwali area pic.twitter.com/70ISlcHQkQ
— IANS (@ians_india) November 27, 2024
இந்த விபத்தில் டாக்டர் அனிருத் வர்மா, டாக்டர் சந்தோஷ் குமார் மவுரியா, டாக்டர் அருண் குமார், டாக்டர் நர்தேவ் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் அடையாளம் காணப்படவில்லை. விபத்தில் காயம் அடைந்த டாக்டர் ஜெய்வீர் சிங் சைஃபாய் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
#WATCH | Uttar Pradesh: Amit Kumar Anand, SP Kannauj says, “Today morning at around 3.30 am, a Scorpio car going to Agra on Lucknow Agra Expressway broke the divider and collided with a truck. 5 people died in the accident, 1 was injured. Out of the 5 dead, 3 were junior resident… pic.twitter.com/aC86nPZzf9
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 27, 2024
கன்னோஜ் மாவட்டத்தின் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சிபி பால், இன்று அதிகாலை 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார். இவர்களில் 4 பேரிடம் இருந்து அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மருத்துவர்களில் ஒருவர் கன்னோஜ் பகுதியில் வசிப்பவர் ஆவார்.
மேலும் படிக்க: இளம்பெண்ணை கொன்ற காதலன்.. பூட்டிய அறையில் நாள் முழுவதும் சடலத்துடன் இருந்த கொடூரம்!
முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்:
இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தகவல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.