உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..

மருத்துவக் கல்லூரியின் NICU (குழந்தைகள்) வார்டில் நேற்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீப்பற்றி எரிவதைக் கண்டு மருத்துவக் கல்லூரியில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இந்தத் தகவல் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..

மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து..

Published: 

16 Nov 2024 06:52 AM

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகள் வார்டில் (NICU) தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் பல குழந்தைகள் தீக்காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ சம்பவத்தில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தையடுத்து, மருத்துவக் கல்லூரி முழுவதும் மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:


மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியின் NICU (குழந்தைகள்) வார்டில் நேற்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீப்பற்றி எரிவதைக் கண்டு மருத்துவக் கல்லூரியில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இந்தத் தகவல் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புப் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு படையினர் முதலில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வந்ததும், தீயணைப்பு வீரர்கள் NICU வார்டுக்குள் நுழைந்தது.

மேலும் படிக்க: அம்மாடியோவ்.. ஒரு எருமை மாடு விலை ரூ.23 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல்?

10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு:

இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினர் அவசரமாக NICU வார்டில் இருந்து குழந்தைகளை வெளியேற்றத் தொடங்கினர். இதில் மொத்தம் 50 குழந்தைகளை மீட்கப்பட்டனர், ஆனால் அதில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் கிடைத்ததும் ஜான்சி மருத்துவமனையின் டி.எம் அவினாஷ்குமார் உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகள் குறித்தும் தகவல் கேட்டறைந்தார். மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து இதுவரை எந்த உயர் அதிகாரியிடமிருந்தும் எந்த அறிக்கையும் வரவில்லை. 6 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. விபத்து நடந்தபோது மருத்துவக் கல்லூரியில் இருந்த நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறுகையில், ” இதுவரை 40 குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 24-25 குழந்தைகள் இன்னும் இரண்டு வார்டுகளில் சிக்கித் தவிக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.


ஜான்சி மருத்துவக் கல்லூரி விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் கேட்டறிந்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ஊடகத் துறையில் அதிரடி.. ரிலையன்ஸ், டிஸ்னி.. $.8.5 பில்லியன் ஒப்பந்தம்!

முதல்வர் யோகியின் அறிவுறுத்தலின் பேரில், துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் மற்றும் சுகாதார முதன்மைச் செயலர் ஜான்சிக்கு வந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி 12 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கமிஷனர் மற்றும் டிஐஜிக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்.

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?