நீட் பயிற்சிக்கு சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்த மிரட்டிய ஆசிரியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்த மாணவியை ஆசியர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியும் உள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது.

நீட் பயிற்சிக்கு சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்த மிரட்டிய ஆசிரியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

கைதான ஆசிரியர்கள் (picture credit : Getty)

Updated On: 

10 Nov 2024 11:21 AM

நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் சேர்ந்த மாணவியை ஆசியர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியும் உள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மைனர் மாணவி ஒருவர் நீட் தேர்வுக்கு தயாராகுவதற்காக கான்பூருக்கு சென்று அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்த ஆண்டு ஜனவரியில் மாணவிக்கு பயிற்சி அளிக்கும் உயிரியல் ஆசிரியர் சாஹில் சித்திக் (32) வீட்டிற்கு விருதுக்கு அழைத்துள்ளார்.

நீட் பயிற்சிக்கு சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை

விருந்தில் அனைத்து மாணவர்களுக்கு கலந்து கொள்வதாகவும் அந்த மாணவியிடம் கூறி இருக்கிறார். இதனை கேட்ட மாணவி, ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக வந்திருப்பதை அறிந்த மாணவி, அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, மாணவியை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுபற்றி வெளியே சொன்னால் வீடியோவை வெளியிடுவதாகவும், குடும்பத்தை கொன்றுவிடுவதாக மாணவியை சித்திக் மிரட்டியுள்ளார். இப்படி மிரட்டி வைத்து மாணவியை பல நேரங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், சித்திக் அவரது வீட்டில் சிறிது நாட்கள் பிணைக் கைதியாகவும் வைத்திருக்கிறார். பின்னர் அங்கு விருந்துகளில் பங்கேற்கும்படி வற்புறுத்தினார். இது போன்ற ஒரு பார்ட்டியின் போது தான் அவர் தனது 39 வயதான வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

Also Read : மருமகளை டிவி பார்க்க விடவில்லை.. நீதிமன்றத்திற்கு பறந்த வழக்கு.. அதிரடி தீர்ப்பு

வீடியோ எடுத்து மிரட்டி ஆசிரியர்கள்

ஹோலி பண்டிகையை ஒட்டி தனது பெற்றோரை சந்திக்க மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு உடனே திரும்பி வரும்படி சித்திக் மாணவியை வற்புறுத்தியுள்ளார். வரவில்லை என்றால் குடும்பத்தினரை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் சித்திக். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து குற்றச்சாட்டப்பட்ட ஒரு ஆசிரியர் கைதாகினார். இது பாதிக்கப்பட்ட மாணவிக்கு புகார் அளிக்க தைரியத்தை தந்தது. இதையடுத்து, இரண்டு ஆசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மாணவி எங்களிடம் கூறினார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அப்போது மாணவி மைனராக இருந்துள்ளார்” என்றார்.

Also Read : காருக்கே இறுதிச் சடங்கு செய்த விவசாயி.. 4 லட்சம் செலவு.. யார்ரா இவரு?

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கடுமையான தண்டனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கொடூர சம்பங்கள் அரங்கேறி வருகின்றனர். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்