5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: ”அந்த நேரத்துல உங்களுக்கு என்ன வேலை?” புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீசார் கேட்ட கேள்வி!

உத்தர பிரதேசத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்ணிடம் காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரசேத மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் கொடுத்துள்ளார். மழையில் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே சென்ற அந்த பெண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

Crime: ”அந்த நேரத்துல உங்களுக்கு என்ன வேலை?” புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீசார் கேட்ட கேள்வி!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Aug 2024 12:45 PM

அலட்சியமாக கேள்வி கேட்ட போலீஸ்: பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்ணிடம் காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரசேத மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானது புகார் கொடுத்துள்ளார். மழையில் வீடியோ எடுப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே சென்ற அந்த பெண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த பெண்ணின் ஷாட்ஸை கிழித்தாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணை தாக்க வரும்போது இரண்டு பெண்கள் அவரை காப்பாற்ற ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அடுத்து, செக்டார் 49 காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுக்க சென்றிருக்கிறார். ஆனால் பணியில் இருந்த போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். மேலும், அந்த நேரத்தில் நீங்கள் ஏன் வெளியே வந்தீர்கள்? என்றும் இரவு 7.30 மணிக்கு என்ன வேலை உங்களுக்கு? என்றும் கேள்வி கேட்டுள்ளனர்.

பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்:

இதனால், அந்த பெண் ஆதாரங்களை சேகரிக்க முயன்றார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அங்கு எதவும் செயல்படாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமையையும், அலட்சியமாக பேசிய காவல்துறை குறித்தும் பேசி வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.  இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.  இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து நொய்டா போலீசார் கூறுகையில், “இந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களால் செக்டார்-49 காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது.

Also Read: சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் உயிரிழப்பு.. கோயிலில் நடந்த சோக சம்பவம்!

கடுமையான பிரிவுகளின் கீழ் உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் மழையில் நனைந்தபடி வீடியோ பதிவு செய்த இடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என நொய்டா போலீசார் உறுதியளித்தனர். பாதிக்கப்பட்ட பெண் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றும், அவர் நொய்டாவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

 

Latest News