Uttar Pradesh CM: உத்தர பிரதேச முதல்வர் மாற்றமா? யோகிக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் மோடி!
Uttar Pradesh Politics: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கட்சியிலும், ஆட்சியிலும் கடும் அதிருப்தி எழுந்துள்ள விவகாரம் தற்போது அம்மாநில அரசியலில் புயலை எழுப்பியுள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 வெற்றி பெற்றன. பாஜக கட்சி வெறும் 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், 2014 தேர்தலில் பாஜக 71 இடங்களையும், 2019 தேர்தலில் 62 இடங்களையும் வென்றால் மத்தியில் மோடியால் ஆட்சி அமைக்க முடிந்தது.
உத்தர பிரதேச முதல்வர் மாற்றமா? உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கட்சியிலும், ஆட்சியிலும் கடும் அதிருப்தி எழுந்துள்ள விவகாரம் தற்போது அம்மாநில அரசியலில் புயலை எழுப்பியுள்ளது. 18வது மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு இந்த முறை பெரும்பான்மை கிடைக்கவில்லை. 272 இடங்கள் தேவை என்ற நிலையில், வெறும் 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியது பாஜக. இதனால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக தளம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குசேதம் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது. இதற்கு காரணம் இந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரததேசம் தான். அதாவது, உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்தது என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோர் கருதுகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 வெற்றி பெற்றன. பாஜக கட்சி வெறும் 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், 2014 தேர்தலில் பாஜக 71 இடங்களையும், 2019 தேர்தலில் 62 இடங்களையும் வென்றால் மத்தியில் மோடியால் ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த முறை வெறும் 33 தொகுதியில் பாஜக பெரும் சரிவை சந்தித்தது. குறிப்பாக, வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடியே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும நிலை ஏற்பட்டது. அதேபோல, பாஜக பிரச்சாரத்தில் மையப்புள்ளியாக விளங்கிய ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதிலேயே பாஜக தோல்வியை தழுவியது.
Also Read: ரீல்ஸ் மோகம்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் தான் இதற்கு காரணம் என்று அக்கட்சியினரே குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் யோகி ஆதித்யநாத்தின் அதீத தன்னம்பிக்கையே இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணம் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறினார். இதனால் அம்மாநில பாஜகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இந்த சூழலில், துணை கேசவ் பிரசாத் மவுரியா திடீரென டெல்லி சென்று அங்கு பிரதமர் மோடி, கட்சி தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார்.
உட்கட்சி பூசல்:
இதை தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஏற்கனவே, பூபேந்திர சவுத்ரிக்கும் ஆதித்யநாத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதாக கூறப்படும் நிலையில், பூபேந்திர சவுத்ரி பிரதமர் மோடியை சந்தித்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கு மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை முதல்வர் யோகி சந்தித்து பேசினார்.
ஒவ்வொரு நகர்வும் உத்தர பிரதேச அரசியலில் புயலை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் மாற்றப்படலாம் என தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இல்லையென்றால் அம்மாநில பாஜக தலைவர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
பாஜக மாநில தலைவராக ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்கவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் துணை முதல்வரான மவுரியா ஓபிசி பிரிவைச் சேர்ந்தவராக இருப்பதால் அவரை முதல்வராக நியமிக்க திட்டமிட்டு வருவதாகவும் ஒரு தரப்பில் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. முதல்வர் பதவி தரப்படாவிட்டாலும் அம்மாநில பாஜக தலைவர் பதவி அவருக்கு தரப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கப்படுகின்றன.
Also Read: தடம் புரண்ட பயணிகள் ரயில்.. மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!