5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: அலறிய குழந்தைகள்.. கடித்தே கொன்ற ஓநாய்கள்.. பாதி உடல் மட்டுமே மிச்சம் கிடந்த கொடூரம்!

உத்தர பிரதேசத்தில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 7 குழந்தைகள் உள்பட 8 பேரை ஓநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மனிதர்களை வேட்டையாடி வரும் ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, 250 பணியாளர்கள், 150 வன அதிகாரிகள் இணைந்து ஓநாய்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Crime: அலறிய குழந்தைகள்.. கடித்தே கொன்ற ஓநாய்கள்.. பாதி உடல் மட்டுமே மிச்சம் கிடந்த கொடூரம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Aug 2024 19:20 PM

குழந்தைகளை கடித்தே கொன்ற கொடூர ஓநாய்கள்: உத்தர பிரதேசத்தில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 7 குழந்தைகள் உள்பட 8 பேரை ஓநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் இந்தா – நேபாள எல்லை மாவட்டமான பஹ்ரைச்சில் உள்ள மஹாசி பகுதியில் வனப்பகுதியை ஒட்டி சுமார் 30 கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான மக்கள் வறுமை காரணமாக தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில், வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் புகுந்த ஓநாய்கள் 8 பேரை கடித்து கொன்றது. கடந்த ஜூலை 17ஆம் தேதி முதல் முறை சிகந்தார்பூர் கிராமத்தை ஒட்டிய ஹர்தி என்ற பகுதியில் 1 வயது குழந்தைகளை ஓநாய்கள் கடித்து குதறியது. மறுநாள் குழந்தையின் பாதி உடல் மட்டுமே கிடைத்தது என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

Also Read: நிற்காத ரயிலுக்கு மக்கள் டிக்கெட் எடுத்த கதை தெரியுமா?

அடுத்து ஜூலை 26ஆம் தேதி 3 வயது குழந்தை தன் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென குழந்தையின் கழுத்தைக் கவ்வி ஓநாய் காட்டுக்குள் இழுத்துச் சென்றது. மறுநாள் சிறுமி உயிரிழந்துள்ளார். இதேபோல, ஆகஸ்ட் 3ஆம் தேதி எட்டு வயது சிறுவன், ஆகஸ்ட் 17ஆம் தேதி நான்கு வயது சிறுமி ஓநாய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தனர்.

கடைசியாக  கடந்த 26ஆம் தேதி நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை ஓநாய் இழுத்து சென்று கொன்று திண்றது. சிறுவனின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இதுவரை ஓநாய்களின் தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஆபரேஷன் பேடியா:

மனிதர்களை வேட்டையாடி வரும் ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, 250 பணியாளர்கள், 150 வன அதிகாரிகள் இணைந்து ஓநாய்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஆபரேஷன் பேடியா என்று பெயரிட்டனர். இந்தியில் பேடியா என்றல் ஓநாய் என்று அர்த்தம். 6 கேமராக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்கள் வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்து ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் ஓநாய்களை அடையாளம் கண்டனர்.

Also Read: சிலை உடைந்த சம்பவம்.. சிவாஜியிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

அதன்படி, மொத்தம் 6 ஓநாய்கள் மனிதர்களை வேட்டையாடுவதை கண்டனர். இதற்கு தற்போது வரை 4 ஓநாய்களை வனத்துறையினர் பிடித்துள்ளனர். பிடிப்பட்ட ஓநாய்கள் லக்னோ உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மீதமுள்ள ஓநாய்களை பிடிப்பதற்கான பணியில் வன அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டில் ஓநாய்களின் தாக்குதல்களின் சுமார் 32 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அங்கு மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்கள் குழந்தைகளை குறிவைத்து வேட்டையாடி வருகின்றன.

Latest News