மீண்டும் கொடூரம்.. செவிலியரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி பாலியல் வன்கொடுமை!

Crime News : உத்தர பிரதேச மாநித்தில் செவிலியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கி, மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீண்டும் கொடூரம்.. செவிலியரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி பாலியல் வன்கொடுமை!

மாதிரிப்படம்

Updated On: 

28 Nov 2024 18:53 PM

உத்தர பிரதேச மாநித்தில் செவிலியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கி, மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இவர் உத்தர பிரதேச மாநிலம் ஜலான் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி ஜலான் பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் சுர்க்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

செவிலியருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

சம்பவத்தன்று இவர் வேலை சென்றுக் கொண்டிருந்தபோது, இவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இவரை அருகில் இருக்கும் காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளது. அப்போது, இரண்டு பேர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு இல்லாமல் நான்கு பேர் சேர்ந்து அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கியதோடு, அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்துள்ளதாக தெரிகிறது.  தனக்கு நடந்ததை பற்றி அந்த பெண் கணவரிடம் கூறியுள்ளார்.

உடனே செவிலியரின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், “செவிலியராகப் பணிபுரியும் என் மனைவி காலை 9 மணியளவில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் என்னை அழைத்து நடந்ததைச் சொன்னாள்.

Also Read : “அசைவம் சாப்பிடக் கூடாது” டார்ச்சர் செய்த காதலன்.. விபரீத முடிவு எடுத்த பெண் விமானி!

சித்ரவதை செய்த கொடூரம்

ஒரு ஆண், அவனுடைய மருமகன் மற்றும் சிலர் அவளை அடித்தனர். நான்கு பேர் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும், அவரது அந்தரங்க உறுப்பினர் மிளகாய் தூவி சித்ரவதை செய்துள்ளனர்” என்றார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “பெண் தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும் ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அந்தப் பெண்ணுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆணுடன் தொடர்பு இருந்தது. அந்த நபரும் அவரது குடும்பத்தினரும் அவரை தாக்கினர்.

Also Read : லின்-இன் உறவில் கொடூரம்.. காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்.. சிக்கியது எப்படி?

ஒரு போலீஸ் குழு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அவர் சில கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார். செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அந்தரங்க உறுப்பில்  மிளகாய் தூவி சித்ரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள்,  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீப காலங்களில்  மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர்.

குறிப்பாக, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஏன் நின்று கொண்டு பால் குடிக்க வேண்டும்..?
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?