5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Uttarakhand Accident: உத்தரகாண்டில் கோர விபத்து.. வேன் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்த சோகம்!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் ரிஷிகேஷ்- பத்ரிநாத் நெடுஞ்சாலையில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ருத்ரபிரயாக் பகுதியில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரகிறது. SDRF மற்றும் போலீஸ் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Uttarakhand Accident: உத்தரகாண்டில் கோர விபத்து.. வேன் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்த சோகம்!
விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Jun 2024 19:27 PM

8 பேர் உயிரிழப்பு: உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் ரிஷிகேஷ்- பத்ரிநாத் நெடுஞ்சாலையில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23க்கும் மேற்பட்ட நபர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். அப்போது காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ருத்ரபிரயாக் பகுதியில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரகிறது. SDRF மற்றும் போலீஸ் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதவிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வேன் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன். SDRF குழுக்கள் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Latest News