5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Varanasi Election Results 2024: மோடி வெற்றி.. வாரணாசி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

வாரணாசி தொகுதி தேர்தல் முடிவுகள்: வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த சில மணி நேரத்திலேயே மோடி பின்னடைவை சந்தித்தார். மோடியைக் காட்டிலும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் அதிக வாக்குகள் பெற்று முதன்மை பெற்றார். இதனால் பரபரப்பு உச்சம் தொட்டது. ஆனால், அடுத்தடுத்து சுற்றுகளில் அஜய்ராயை, மோடி முந்திவிட்டார். அஜய் ராயை காட்டிலும் சுமார் 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.

Varanasi Election Results 2024: மோடி வெற்றி.. வாரணாசி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!
வாரணாசி தொகுதி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2024 20:35 PM

வாரணாசியில் மோடி வெற்றி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் இறுதி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த சில மணி நேரத்திலேயே மோடி பின்னடைவை சந்தித்தார். மோடியைக் காட்டிலும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் அதிக வாக்குகள் பெற்று முதன்மை பெற்றார். இதனால் பரபரப்பு உச்சம் தொட்டது. ஆனால், அடுத்தடுத்து சுற்றுகளில் அஜய்ராயை, மோடி முந்திவிட்டார். அஜய் ராயை காட்டிலும் சுமார் 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார். அதாவது, மோடி 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 வாக்குகள் பெற்று வெற்ற பெற்ற நிலையில், காங்கிரஸின் அஜய் ராவ் 4,60,457 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஜமால் லாரி 33,766 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்தார்.

வாரணாசி தொகுதி:

நாட்டில் அதிகபட்சமாக மக்களவைக்கு 80 உறுப்பினர்களை அனுப்பி வைக்கும் மிகப்பெரிய மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்குகிறது.  மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பராமரித்து வளர்த்தெடுக்கும் மாநிலமாக உத்தர பிரதேசம் கருதப்படுகிறது. இந்த மாநிலத்தை சார்ந்தே பல அரசியில் சமூக நகர்வுகள் தேசிய அளவில் திட்டமிடப்படுகின்றன. இந்த மாநிலத்தில் பிரமாண சமூகவாக்குகள் 19 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. அதில் 12 சதவீதம் பேர் கிழக்கு உத்தர பிரதேசத்தில் வசிப்பவர்கள். குறிப்பாக தேசிய அளவில் மிகவும் முக்கியமான மாவட்டமாக வாரணாசி பார்க்கப்படுகிறது.  ஏனென்றால் வாரணாசி தொகுதியில் இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மாநிலத்தை வெறும் எண்ணிக்கைக்கானதாக பார்க்காமல் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் (உ.பி.முதல்வர்) செல்வாக்கை பரிசோதிக்கும் களமாக பாஜக பார்க்கிறது. எனவே, 2024 மக்களவைத் தேர்தலில்  வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிட்டுள்ளார்.

முந்தைய தேர்தல் நிலவரம்:

வாரணாசி தொகுதியானது 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் கையில் இருந்தது. 1967ல் சிபிஎம் கட்சி வென்றது. 1971ல் காங்கிரஸ், 1977ல் ஜனதா கட்சி, 1980 முதல் 1984 வரை காங்கிரஸ், 1989ல் ஜனதா தாள் கட்சி கையில் இருந்தது. இதன்பின்னர், 1991 முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான 4 தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியமாகவும் வென்றது. 2004ஆம் ஆண்டு காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா இத்தொகுதியில் வென்றார். 2009ஆம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி வெற்றி பெற்றார். 2014ஆம் ஆண்டு வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பிரதமர் மோடி 5 லட்சத்து 81 ஆயிரத்து 022 வாக்குகள் பெற்ற நிலையில், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் 2 லட்சத்து 09 ஆயிரத்து 238 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஏறத்தாழ 56.37 சதவீத வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியை மோடி பதிவு செய்தார். மேலும், காங்கிரஸின் அஜய் ராய் 75,614 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். மேலும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்று நிலையில், சமாஜ் கட்சியின் சாலின் யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். காங்கிரஸின் அஜய் ராய் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

 

Latest News