L.K. Advani: மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை… எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு? - Tamil News | | TV9 Tamil

L.K. Advani: மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை… எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு?

Published: 

04 Jul 2024 06:58 AM

L.K. Advani Hospitalised: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் வினித் சூரியின் கண்காணிப்பில் அத்வானி இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

L.K. Advani: மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை... எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு?

எல்.கே. அத்வானி

Follow Us On

அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் வினித் சூரியின் கண்காணிப்பில் அத்வானி இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமரான அத்வானி கடந்த ஜூன் 26ஆம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநிரகவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அத்வானி, ஜூன் 27ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருந்த அத்வானிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read: மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து வாய் திறந்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?

யார் இந்த எல்.கே. அத்வானி?

பாஜக துவங்கியதில் இருந்து அதிக காலம் தலைவராக பதவி வகித்தவர் அத்வானி. ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், 1999 முதல் 2004 வரை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் முதலில் உள்துறை அமைச்சராகவும், பின்னர் துணைப் பிரதமராகவும் இருந்தவர். 1989 ஆம் ஆண்டு 86 இடங்களும், 1992 ஆம் ஆண்டு 121 இடங்களும் 1996 ஆம் ஆண்டு 161 இடங்களும் வென்று இந்திய அரசியலில் ஓர் அசைக்கமுடியாத இடத்தை பாஜக பெற்றது. தற்போது வயது மூப்பு காரணமாக அத்வானி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷணும், சமீபத்தில் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. மேலும் எனது நாடு எனது வாழ்க்கை என்ற பெயரில் 1040 பக்கங்கள் கொண்ட சுயசரிதை எழுதி 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

Also Read: மகாராஷ்டிராவில் தீயாய் பரவும் ‘ஜிகா’ வைரஸ்.. அனைத்து மாநிலங்களுக்கு அலர்ட் கொடுத்த மத்திய அரசு!

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version