LK Advani Health Updates: அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர கண்காணிப்பு

அத்வானி உடல்நிலை சற்று தேறி இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. 96 வயதாகும் அத்வானி சமீபகாலமாக வயது மூப்புக்குரிய உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

LK Advani Health Updates: அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர கண்காணிப்பு

கோப்பு புகைப்படம்

Updated On: 

14 Dec 2024 13:50 PM

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சற்று தேறி இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அத்வானி உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது. 96 வயதாகும் அத்வானி சமீபகாலமாக வயது மூப்புக்குரிய உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அத்வானி இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர். 1927 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி கராச்சியில் பிறந்த அத்வானி, தனது 14 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார்.

1947 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை பிறகு அவரது குடும்பம் இந்தியாவுக்கு குடி பெயர்ந்தது.1951 ஆம் ஆண்டு ஜனதா சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். 1970 ஆம் ஆண்டு ராஜ்யசபாவில் எம்பி யாக தேர்வு செய்யப்பட்ட மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார். 1980 ஆம் ஆண்டு பாஜகவின் நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Viral Video : ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்.. இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அத்வானியின் அரசியல் வாழ்க்கை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அத்வானியின் உடல்நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கேட்டறிந்தார். 1941 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றிய அத்வானி இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணியாற்ற அனுப்பப்பட்டார். 1951 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜன சங்கத்தில் இணைக்கப்பட்டதும் அதில் உறுப்பினராக சேர்ந்த அத்வானி 1957 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்களை கையாளுவதற்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டார்.

பின்னர் 1966 ஆம் ஆண்டு ஜன சங்கத்தின் தேசிய தலைவர்களில் ஒருவராக அத்வானி தேர்வு செய்யப்பட்டார். இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனப்படுத்தியதற்கு பின்னால் நடைபெற்ற பொதுதேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் அத்வானி தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றினார். பாஜக உருவாக்கப்பட்ட பிறகு நாடாளுமன்ற ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினராக அத்வானி பதவி வகித்துள்ளார்.

Also Read: EVKS Elangovan: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. ஏன் தெரியுமா?

1970 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை 4 முறை ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மேலும் மாநிலங்களவையின் அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1989 ஆம் ஆண்டு முதல் ஏழு முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி., ஆக அத்வானி பதவி வகித்திருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இந்தியாவே மிகப் பெரிய பரபரப்புக்குள்ளான பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் பின்னணியில் அத்வானி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். 1990களின் பிற்பகுதியில் இந்துத்துவா அரசியலில் எழுச்சிக்கு முக்கிய காரணமாக அத்வானி இருந்தார். 1998 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் வரை அத்வானி உள்துறை அமைச்சர் ஆகவும், 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை துணை பிரதமராகவும் பதவி வகித்தார். 2019 ஆம் ஆண்டு வரை அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அவர், பாஜகவை மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்த்த பெருமைக்குரியவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

சிறப்பு செய்த மத்திய அரசு

லால் கிருஷ்ணா அத்வானிக்கு 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் 2வது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு கமலா என்ற பெண்ணை திருமணம் செய்த அத்வானிக்கு பிரதீபா என்ற மகளும், ஜெயந்த் என்ற மகனும் உள்ளனர். கமலா 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அத்வானிக்கு வயது மூப்பால் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்
தினமும் பிஸ்தா சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?