Shocking News : மூதாட்டி மற்றும் சிறுவன் மீது காவலர்கள் கொலைவெறி தாக்குதல்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி!
Viral Video | இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்தில் என்ன நடக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக கூறி, முதலமைச்சர் மோகன் யாதவ் அரசின் காவல்துறையினர் ரவுடிதனத்தில் ஈடுபடுகின்றனர் என்று கடுமையாக விமர்சித்திருந்தது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ : மத்திய பிரதேச மாநிலம் காத்னி மாவட்டத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் மூதாட்டி மற்றும் அவரது 15 வயது பேரன் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டதை அடுத்து இணையத்தில் வைரலாக தொடங்கியது. இந்த சம்பவத்திற்கு இணையத்தில் கடும் எதிர்ப்புகளும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
#Horrific A shocking incident has emerged from Katni GRP police station in Madhya Pradesh, where a Dalit mother and her minor son were brutally beaten up by police officials inside the police station itself. Manuwadi media remains silent as usual…#DalitLivesMatter pic.twitter.com/sRoAyleKzo
— The Dalit Voice (@ambedkariteIND) August 28, 2024
சம்பவம் குறித்து முதலமைச்சர் மோகன் யாதவ் எக்ஸ் தளத்தில் விளக்கம்
இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்தில் என்ன நடக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக கூறி, முதலமைச்சர் மோகன் யாதவ் அரசின் காவல்துறையினர் ரவுடிதனத்தில் ஈடுபடுகின்றனர் என்று கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ குறித்து விளக்கமளித்த மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், காத்னி ரெயில்வே காவல் நிலைய போலீசார் தொடர்பான பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ரெயில்வே டி.ஐ.ஜியை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். முதற்கட்ட விசாரணையில், சம்மந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பாளர், ஒரு தலைமை காவலர் மற்றும் 4 காவலர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ராட்சத முதலைகள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
வீடியோ குறித்து எஸ்.பி சிமாலா பிரசாத் விளக்கம்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இது குறித்து எஸ்.பி சிமாலா பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தீபக் வன்ஸ்கர் என்ற நபர் மீது 19 வழக்குள் நிலுவையில் உள்ளன. அது தொடர்பாக காவல்துறையினர், அவரது குடும்பத்தினரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தான் அது. அந்த வீடியோவில் இருக்கும் மூதாட்டி மற்றும் சிறுவன் மீதும் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.