Viral Video : ‘பெட்ரோலுக்கு பணம் தர முடியாது’ பங்க் ஊழியரை காரில் இழுத்துச் சென்ற போலீஸ்
Kerala Police Issue | சந்தோஷ்குமார் என்ற போலீஸ் அதிகாரி காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். பெட்ரோல் போட்ட அதிகாரி பணம் தராமல் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் ஊழியர் பணம் கேட்கவே ரூ.2,100-க்கு ரூ.1,900 மட்டுமே வழங்கியுள்ளார். மீதி பணத்தை ஊழியர் கேட்கவே ஆத்திரமடைந்த காவலர், ஊழியரை காரின் பேனட்டில் வைத்து காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
வைரல் வீடியோ : கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி, சந்தோஷ்குமார் என்ற போலீஸ் அதிகாரி காருக்கு பெட்ரோல் போடுவதற்காக அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு ரூ.2,100-க்கு பெட்ரோல் போட்டுள்ளார். பெட்ரோல் போட்ட ஊழியர், பெட்ரோலுக்கான பணத்தை போலீஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளார். முதலில் பணம் தர மறுத்த காவலர், பிறகு 1,900 ரூபாயை ஊழியரிடம் கொடுத்துள்ளார். 2,100 ரூபாய் பெட்ரோலுக்கு 1,900 கொடுத்ததால் அதிர்ச்சியடைந்த ஊழியர் மீதி பணத்தை தறுமாறு காவலரிடம் கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த காவலர் மீதி பணத்தை தர மறுத்து அங்கிருந்து கிளம்ப முடிவு செய்து காரை ஆன் செய்துள்ளார். அவர் கிளம்ப முயற்சிப்பதை சுதாரித்துக்கொண்ட ஊழியர், காரை வழிமறித்து நின்றுக்கொண்டு பணத்தை கேட்டுள்ளார். மேலும் பணத்தை கொடுத்துவிட்டு காரை எடுத்துச் செல்லுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர், காரை ஊழியர் மீது மோதியுள்ளார். இதன் காரணமாக ஊழியர் காரின் பேனட்டில் சிக்கிக்கொள்ள, அந்த காவலரோ காரை நிறுத்தாமல் ஊழியரை பேனட் மீது வைத்துக்கொண்டு சுமார் 150 மீட்டர் வரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : Sexual Harassment : அக்காவுடன் நிச்சயம்.. தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி.. திடுக்கிடும் பின்னணி!
இந்நிலையில் காரின் பேனட்டில் ஆளுடன் வேகமாக சென்ற காரை, அங்கிருந்த போக்குவரத்து காவல்துறை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் காவலர் மீது தவறு இருப்பதை உணர்ந்த போக்குவரத்து காவலர்கள் இருவரையும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த போலீஸ் கமிஷ்னர், காவலர் சந்தோஷ்குமார் தான் குற்றவாளி என கூறி அவர் மீது கொலைமுயற்சி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை பணியிடை நீங்கம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
In #Kerala‘s #Kannur, a police driver has been booked for attempt to murder after he dashed into a petrol pump employee and drove with the man on the bonnet on being asked to pay for the fuel he filled on Monday.
The accused has been arrested and suspended from service, police… pic.twitter.com/oNnGKFUVDw
— Hate Detector 🔍 (@HateDetectors) July 16, 2024
இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது அந்த போலீஸ் அதிகாரியின் கொடூர செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.