Viral Video: நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்த நபர்.. மோதிய லாரி.. வைரல் வீடியோ!
UttarPradesh: உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் குடிபோதையில் நடுரோட்டில் ஒரு நபர் சேர் போட்டு அமர்ந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சேர் போட்டு அமர்ந்தது எல்லாம் பெரிய விஷயமா என நினைக்கலாம். ஆனால் அங்கு நடந்ததே வேறு சம்பவம். கொட்டும் மழையில் அந்த நபர் போலீஸ் சோதனை சாவடி முன்பு அமர்ந்திருப்பது போல தெரிகிறது.
வைரல் வீடியோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் குடிபோதையில் நடுரோட்டில் ஒரு நபர் சேர் போட்டு அமர்ந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சேர் போட்டு அமர்ந்தது எல்லாம் பெரிய விஷயமா என நினைக்கலாம். ஆனால் அங்கு நடந்ததே வேறு சம்பவம். கொட்டும் மழையில் அந்த நபர் போலீஸ் சோதனை சாவடி முன்பு அமர்ந்திருப்பது போல தெரிகிறது. அப்போது அந்த சாலையில் அந்த போதை நபர் உட்கார்ந்திருக்கும் நிலைக்கு பின்புறமாக கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருக்கிறது. லாரி அந்த நபரின் அருகே செல்லும் என நினைத்த பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படிங்க: கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
Drunk Man Narrowly Escapes Truck Collision on Busy Road While Sitting on the Chair, in the middle of the road, in #Pratapgarh, #UttarPradesh.
The #UP police arrived at the scene and took the man into custody for further treatment pic.twitter.com/mUuLk8sFdA
— Spicy Sonal (@ichkipichki) August 31, 2024
கணநேரத்தில் கனமழையின் போது சாலையின் நடுவில் சேரில் அமர்ந்திருந்த அந்த நபரின் மீது லாரி மோதியது. ஆனால் சேர் மட்டுமே உடைந்த நிலையில் அந்த போதை நபர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த அதிர்ச்சியான சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி நடைபெற்றுள்ளது. போலீஸ் சோதனை சாவடி முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Preity Mukhundhan: மலையாளத்தில் அறிமுகமாகும் ஸ்டார் பட நடிகை.. எகிறும் எதிர்பார்ப்பு!
இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் அந்த போதை இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த நபர் பெயர் அஜய் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் பின்னர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஷிவ் நாராயண் வைஷ்யா என்ற காவல்துறை அதிகாரி, அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரது குடும்பத்தினர் கூறியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தே அந்த போதை நபரான அஜய் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.