5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video: ஹரியானாவில் சாலையில் பறந்த வாகனங்கள்.. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Haryana: இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை தரமான சாலை வசதி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசு செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு இருமுறை சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை, வெள்ளம் போன்ற இயற்கை பாதிப்புகளாலும் சேதமடையும் சாலைகள் புகார்களின் அடிப்படையில் செப்பனிடப்படுகிறது.

Viral Video: ஹரியானாவில் சாலையில் பறந்த வாகனங்கள்.. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சாலையில் பறந்த வாகனங்கள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Oct 2024 13:24 PM

ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் போடப்பட்ட வேகத்தடையின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக நாடுகளில் சில தவிர பெரும்பாலான நாடுகளின் அனைத்து பகுதிகளும் சாலை மார்க்க இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை தரமான சாலை வசதி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசு செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு இருமுறை சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை, வெள்ளம் போன்ற இயற்கை பாதிப்புகளாலும் சேதமடையும் சாலைகள் புகார்களின் அடிப்படையில் செப்பனிடப்படுகிறது.

Also Read: Health Insurance Scheme: மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் வரை காப்பீடு.. யாரெல்லாம் பெறலாம்?

இத்தகைய சாலைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இப்படியான நிலையில் ஹரியானா மாநிலத்தில் குருகிராமில் எடுக்கப்பட்ட வீடியோ இணையவாசிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு திடீரென சாலையில் இருந்து சில மீட்டர் தூரம் உயரே பறந்து மீண்டும் சாலையை அடைந்து பயணத்தை தொடர்கிறது. அப்போது தீப்பொறி காரின் சக்கரத்தில் இருந்து எழுகிறது.

அப்படி என்ன அந்த இடத்தில் இருக்கிறது என பார்த்தால் ஒரு வேகத்தடை போடப்பட்டிருக்கிறது. அதில் முன்னெச்சரிக்கையாக வெள்ளை நிற பெயிண்ட் கொண்டு அடையாளக்குறி எதுவும் போடப்படவில்லை. முதலில் ஒரு கார் செல்லும் நிலையில், பின்னால் ஒரு டாரஸ் லாரி வந்து அந்த வேகத்தடையில் ஏறி இறங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்படி சாலை இருந்தால் விபத்து ஏற்பட்டு உயிர்கள் போனால் யார் என்ன செய்வார்கள் என வீடியோவை பதிவிட்டவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: Diwali Holiday: தீபாவளி விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்!

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ஹரியானா மக்கள் பல கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஹரியானாவில் சாலைகளில் சுதந்திரமாக சுற்றி தெரியும் விலங்குகளை பிடிக்க நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் சாலைகளில் மக்கள் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த வேகத்தடையை கவனிக்க நேரமில்லையா என கேள்வி எழுப்பினர். இன்னொருவர் சர்வீஸ் லைனில் போடப்பட்டுள்ள இந்த வேகத்தடை அதிகாரிகள் கண்ணில் சிக்கும் வரை ஷேர் செய்யவும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாலை போக்குவரத்து என்பது மிக முக்கியமானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு 3676 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை துறையால் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஐம்பது கிலோமீட்டர் ஒருமுறை சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சாலை பராமரிப்பு கட்டணம் வாகனங்களிடம் அதன் வடிவங்களுக்கு ஏற்ப வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணங்களை ரத்துச் செய்ய வேண்டும் என பல மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்து வருகிறது.

Also Read: Kanda Sashti 2024: வடமாநிலங்களில் கந்த சஷ்டி எப்படி கொண்டாடுவார்கள் தெரியுமா?

ஆண்டுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வரும் நெடுஞ்சாலையில் சரியான அடையாளங்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சாலை விதிகளை மதிக்காமல் இருப்பதால் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. அதேசமயம் நகரம் முதல் கிராமம் வரை தரமான சாலைகள் போடப்பட்டு அதற்கான குறியீடுகள் சரியாக பொருத்தப்படுவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News