5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video: வெடித்து சிதறிய பட்டாசுகள்.. பதறி ஓடிய மக்கள்.. வைரலாகும் வீடியோ!

Hyderabad: மக்கள் கூட்டத்தால் பட்டாசு கடை நிரம்பி வழிந்தது. தீபாவளிக்கு முந்தைய விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடைக்கு படையெடுத்தனர். இதனால் அந்த வீடியோவில் தள்ளு முள்ளு ஏற்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அப்போது திடீரென கடைக்குள் பட்டாசுகள் வெடிக்கும் காட்சிகளும், மக்கள் சிதறி ஓடுவதும் இடம் பெற்றுள்ளது. உடனடியாக சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையிரும், காவல்துறையினரும் விரைந்து வந்தனர்.

Viral Video: வெடித்து சிதறிய பட்டாசுகள்.. பதறி ஓடிய மக்கள்.. வைரலாகும் வீடியோ!
பட்டாசு கடை விபத்து
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 29 Oct 2024 09:58 AM

வைரல் வீடியோ: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் பட்டாசு கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து கடைகளிலும் புத்தாடைகள் எடுக்கவும் , பட்டாசுகள் வாங்கவும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளி என்றாலே பலவிதமான பட்டாசுகள், இரவில் வெடிக்கப்படும் வாண வேடிக்கைகளும் தான் நினைவுக்கு வரும். துப்பாக்கி ரோல் கேப் தொடங்கி சரவெடி, 120 ஷாட், ஸ்கை ஷாட், புஸ்வானம், சங்கு சக்கரம், சாட்டை,  ராக்கெட், விசில் வெடி, ஃபட்டர்ஃப்ளை என ரகரகமாக ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற வெடிகள் சந்தையில் தயாரிக்கப்பட்டு விற்பனைச் செய்யப்படுகிறது. இத்தகைய வெடிகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் அறிவுறுத்தப்பட்டாலும் விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. வெடிகளை வெடிப்பதில் இருக்கும் அதீத ஆர்வமே இதற்கு காரணமாகும்.

Also Read: பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்!

இப்படியான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அபிட்ஸ் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறிய நிலையில் தீ வேகமாக அருகில் உள்ள உணவகத்திற்கும் பரவியது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். மேலும் அருகில் பட்டாசு கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு கார்கள் எரிந்து நாசமாகின என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் கூட்டத்தால் பட்டாசு கடை நிரம்பி வழிந்தது. தீபாவளிக்கு முந்தைய விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடைக்கு படையெடுத்தனர். இதனால் அந்த வீடியோவில் தள்ளு முள்ளு ஏற்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அப்போது திடீரென கடைக்குள் பட்டாசுகள் வெடிக்கும் காட்சிகளும், மக்கள் சிதறி ஓடுவதும் இடம் பெற்றுள்ளது. உடனடியாக சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையிரும், காவல்துறையினரும் விரைந்து வந்தனர்.

மக்கள் கூட்டம் மற்றும் கட்டிடம் அதிகம் கொண்ட அப்பகுதியில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்க 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த பேரிடர் மீட்பு பணியாளர்கள் இரவு 10.45 மணி வரை போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து நடந்த பட்டாசுக்கடை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டதை கண்டறிந்தனர். பட்டாசுகள் வெடித்ததால் பெரும் புகை மூட்டம் அப்பகுதியை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் மூச்சுவிட சிரமப்பட்டனர். இதனிடையே தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் அப்பகுதியில் செயல்படும் அனைத்து பட்டாசு கடைகளிலும் காவல்துறையினர் ஆவணங்களை சரிபார்க்கும் முடிவில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: Diwali 2024: தீபாவளி நாளில் இப்படியெல்லாம் செய்யாதீங்க.. அப்புறம் பணத்துக்கு பிரச்னை தான்!

பட்டாசு காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

  • பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆடைகளை அகற்றி காற்றோட்டமான சூழல் கிடைக்க உதவவும். காரணம் தீப்பொறி பட்டு ஆடைகள் எரிவதோடு அவை தோலில் ஒட்டிக்கொண்டு பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • குளிர்ந்த நீரில் அடிப்பட்ட பகுதியை நன்கு கழுவவும். இதனால் வலி, வீக்கம் ஆகியவை குறையும். எக்காரணம் கொண்டும் ஐஸ்கட்டியை பயன்படுத்தக்கூடாது.
  • பட்டாசு காயம்பட்ட பகுதியில் சற்று தளர்வான பேண்டேஜ் போன்ற துணிகளை வைத்து கட்டுவது நல்லது. தீக்காயம் ஏற்பட்ட பகுதியில் ஈரப்பதமூட்டும் மாய்ஸ்டர் லோஷனைப் பயன்படுத்துவது சிறந்தது. இது தோல் வறட்சியைத் தடுக்க உதவும்.

Latest News