Viral Video: மனுக்களை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு உருண்டு வந்த நபர்.. விரக்தியின் உச்சம்.. - Tamil News | Viral Video of Madhya Pradesh Man Rolls without shirt Outside Collector's Office wearing Garland Of Complaint Pages surfaces on social media | TV9 Tamil

Viral Video: மனுக்களை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு உருண்டு வந்த நபர்.. விரக்தியின் உச்சம்..

Published: 

04 Sep 2024 11:31 AM

மத்தியபிரதேச மாநிலம் நிமுச் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் பிரஜாபதி. இவர் தனது கிராம பஞ்சாயத்து தலைவரான கன்கரியா என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் தொடர் புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியில் இந்த செயலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

Viral Video: மனுக்களை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு உருண்டு வந்த நபர்.. விரக்தியின் உச்சம்..

மனுக்களை மாலையாக அணிந்து வந்த நபர் (image source: pti)

Follow Us On

வைரல் வீடியோ: மத்தியப் பிரதேசத்தின் நீமுச்சில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒருவர், தனது கழுத்தில் காகித மாலையை அணிந்துகொண்டு ஊர்வலமாகச் சென்று, ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கிராமத்தின் சர்பஞ்ச் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை முன் வைத்தார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் நிமுச் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் பிரஜாபதி. இவர் தனது கிராம பஞ்சாயத்து தலைவரான கன்கரியா என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் தொடர் புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியில் இந்த செயலை செய்ததாக தெரிய வந்துள்ளது.


சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சாலையில் மனுக்களை மாலையாக செய்து முகேஷ் பிரஜாபத் உருளும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த ஆவணங்கள் அவரது சொந்த கிராமமான கன்காரியாவின் சர்பஞ்ச் மீதான ஊழல் புகார்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோவில் கைது செய்யப்பட்ட தந்தை.. நடந்தது என்ன?

கடந்த இரண்டு மாதங்களில் நடைபெறும் இரண்டாவது சம்பவம் இதுவாகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஹிமான்சு சந்திரா, அவர் கொடுத்த மனுக்கள் மீது மீண்டும் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) மம்தா கேடே, பிரஜாபத் ஏற்கனவே சர்பஞ்ச் மீது புகார் அளித்ததாகவும், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அவரது குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தியதாகவும் குறிப்பிட்டார். தற்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version