Viral Video: சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!

Mumbai: சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது சரிவாக உள்ள சாலையில் 2 பேர் செங்குத்தான பகுதியை நோக்கி நடந்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென அந்த 2 பேரும் எதிரில் ஏதொஇ ஒன்றைப் பார்த்து பயந்து போய் சாலையில் இருந்து விலகி ஓடுகின்றனர். நொடிப்பொழுதியில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வரும் சிறுவன் ஒருவர் அருகிலிருந்த வீட்டு சுவற்றில் மோதி நிலைகுலைந்து கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி கிடக்கிறார்.

Viral Video: சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!

சிறுவன் விபத்துக்குள்ளான காட்சி

Published: 

02 Nov 2024 10:16 AM

வைரல் வீடியோ: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் சுவற்றில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் பலியானவர் மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள மீரா-பயந்தர் நகர் சாலையில் நடைபெற்றுள்ளது.சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது சரிவாக உள்ள சாலையில் 2 பேர் செங்குத்தான பகுதியை நோக்கி நடந்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென அந்த 2 பேரும் எதிரில் ஏதோ ஒன்றைப் பார்த்து பயந்து போய் சாலையில் இருந்து விலகி ஓடுகின்றனர். நொடிப்பொழுதியில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வரும் சிறுவன் ஒருவர் அருகிலிருந்த வீட்டு சுவற்றில் மோதி நிலைகுலைந்து கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி கிடக்கிறார்.

அதிர வைத்த சிசிடிவி காட்சி

உடனே பதறிப்போன இருவர் அந்த சிறுவனை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அந்த பகுதிக்கு வருகை தரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ளா தாதா சாகேப் அம்பேத்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மீரா பயந்தர் நகர எல்லைக்குட்பட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விபத்து நடைபெற்ற இடத்தின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சரிவான சாலையில் ஸ்டண்ட் செய்ய முயன்றபோது இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Also Read: IND vs NZ: சர்ச்சையான சிராஜ் பேட்டிங் ஆர்டர்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன் என்றால் என்ன..?

காவல்துறையினர் அறிவுரை

கடந்த அக்டோபர் 28 ஆம் தேதியே இந்த விபத்து நடந்த நிலையில் தற்போது தான் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆபத்தை உணராமல் இதுபோன்ற சாகசங்கள் செய்வதால் நொடிப்பொழுதில் விலை மதிப்பில்லாத உயிர் பறிபோனது துரதிஷ்டவசமான சம்பவம் என இணையவாசிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவன் கோட்பந்தர் கோட்டைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து சம்பவமானது நடைபெற்றுள்ளது.

சைக்கிள் மட்டுமல்ல கார், பைக்,  ஆட்டோ என அனைத்து விதமான வாகனங்களிலும் சாகசம் செய்வது என்பது தொடர்கதையாகி விட்டது. இதற்கு சட்டப்படி தண்டனை இருக்கிறது என்றாலும் தொடர்ந்து விதிமீறல்களில் மக்கள் ஈடுபட்டு வருவது தவறான ஒன்றாகும். இது உங்களை மட்டுமின்றி உங்களை சுற்றியிருப்பவர்களை பாதிக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்படுமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Also Read: Kandha Sasti 2024: கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்க முடியவில்லையா? ஆறு நாட்களும் இந்த முறையில் தீபம் ஏற்றுங்கள்…

மற்றொரு விபத்து

இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பவானி நகரில் தீபாவளி பண்டிகைக்கு நடைபெற்ற விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அங்கு வசித்து வரும் இரண்டு சிறுமிகள் தங்கள் வீடுகளுக்கு வெளியே தீபாவளியை முன்னிட்டு ரங்கோலி கோலமிட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதுதொடர்பாக இந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கறுப்பு நிற கார் ஒன்று பிரியன்ஷி மற்றும் நிவ்யா ஆகிய இரு சிறுமிகள் மீது மோதியது என சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவத்தின் போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தது. அந்த கார் நேரடியாக அருகே இருந்த கடைக்குள் மோதி நின்றது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் காரை கவிழ்த்து போராட்டம் நடத்தினர்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?