Viral Video: வழிகாட்டி பலகை மீது ஏறி உடற்பயிற்சி.. நெடுஞ்சாலையில் இளைஞர் விபரீதம்!

சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில் அதனை சிறியவர் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்கு அம்சங்களாக திகழ்வதோடு மட்டுமின்றி பிரபலமாகவும் பணம் சம்பாதிப்பதற்கான நடைமேடையாகவும் அமைகிறது. இதனை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் வித்தியாசமாகவும் ஆபத்தான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மத்திய மாநில அரசுகள் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Viral Video: வழிகாட்டி பலகை மீது ஏறி உடற்பயிற்சி.. நெடுஞ்சாலையில் இளைஞர் விபரீதம்!

இளைஞர் செய்த விபரீத செயல்

Published: 

30 Sep 2024 17:00 PM

வைரல் வீடியோ: உத்தரப்பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையின் மீது ஏறி உடற்பயிற்சி செய்த இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அதுதொடர்பாக அம்மாநில காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சச்சின் என்ற இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து இந்த வீடியோ வெளியாகியிருந்தது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள அமேதி தொகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள நெடுஞ்சாலையில் 10 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை மீது ஏறிய இளைஞர் ஒருவர், உடற்பயிற்சியான புல்-அப்களை எடுக்கும் காட்சிகள் கொண்ட 16 விநாடி வீடியோ அதில் இடம் பெற்றிருந்தது. உயிருக்கு ஆபத்தான முறையில் இத்தகைய செயல்களில் ஈடுபட்ட நபருக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.

பலரும் பெயர் பலகையின் மீது ஏறிய நபரையும், அவரை எச்சரிக்காமல் வீடியோ எடுத்த நபரையும் தண்டிக்க வேண்டும் என தெரிவித்தனர். உடனடியாக இந்த விவகாரம் அமேதி மாவட்ட காவல்துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீசார், விரைவில் இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிலளித்துள்ள அமேதி போலீசார், “இந்த புல் அப் விவகாரம் கொண்ட வீடியோ அமேதி காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ஸ்டண்ட் செய்யும் நபர் மீது விதிகளின்படி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: Tirupati Laddu Row: ” அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைக்க வேண்டும்” – திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து..

சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில் அதனை சிறியவர் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் பொழுதுபோக்கு அம்சங்களாக திகழ்வதோடு மட்டுமின்றி பிரபலமாகவும் பணம் சம்பாதிப்பதற்கான நடைமேடையாகவும் அமைகிறது. இதனை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் வித்தியாசமாகவும் ஆபத்தான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மத்திய மாநில அரசுகள் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு விதிமீறல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் ரயிலில் ஸ்டாண்ட் காட்சிகளை செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தவறால் அந்த வாலிபர் ஒரு கை மற்றும் ஒரு காலை இழக்கும் நிலை ஏற்பட்டது. லைக்ஸ் பெறவும், பார்வைகளை பெறவும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tamilnadu Weather Alert: குமரிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி.. தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?

முன்னதாக இதே போல்  மெட்ரோ ரயில் ஒன்றில் சஹேலி ருத்ரா என்ற இளம் பெண் ஒருவர் தமன்னா நடித்த ட்ரீட் 2 படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான ஆட்சி பாடலுக்கு நடனம் ஆடினார். இதனை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட நிலையில் ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பலரும் பொது இடத்தில் இப்படியாக நடந்து கொள்வது என சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர். அந்த வீடியோவில் மெட்ரோவில் பயணிக்கும் மக்கள் சிலர் எரிச்சலுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான கண்டனங்களை பதிவு செய்துள்ளவர்கள் மெட்ரோ நிர்வாகமும் காவல்துறையினரும் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!