Vodafone Recharge Plan: ஜியோ, ஏர்டல் வரிசையில் வோடாஃபோன்.. அதிரடியாக உயர்ந்த ரிசார்ஜ் கட்டணம்..!

இந்தியாவின் டாப் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்று வோடோஃபோன். உலகில் இருக்கும் பெருமாலான மக்கள் இந்த நெட்வொர்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், செல்போன் கட்டணத்தை ஜியோ மற்றும் ஏர்டல் நிறுவனம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கட்டணம் நடைமுறை ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vodafone Recharge Plan: ஜியோ, ஏர்டல் வரிசையில் வோடாஃபோன்.. அதிரடியாக உயர்ந்த ரிசார்ஜ் கட்டணம்..!

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Jun 2024 08:59 AM

வோடோஃபோன் ரிசார்ஜ் ப்ளான்: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து, வோடாஃபோன் ஐடியா டெலிகாம் நிறுவனமும் தங்களது சேவைக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.அதன்படி, கட்டணங்கள் சுமார் 20 ரூபாயில் தொடங்கி 600 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும் தங்களது சேவை கட்டணத்தை உயர்த்திய நிலையில், வோடாஃபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஃப்ளிப்கார்ட்-ஐ தளமாக கொண்ட சூப்பர் மணி செயலி: இது என்ன? எப்படி செயல்படும்?

புதிய கட்டண விவரங்கள்:

  • 28 நாட்களுக்கு 179 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவைக்கான கட்டணம் தற்போது 199 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 84 நாட்களுக்கு 459 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவைக்கான கட்டணம் தற்போது 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 365 நாட்களுக்கு 1799 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவைக்கான கட்டணம் தற்போது 1999 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 28 நாட்களுக்கு 269 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 28 நாட்களுக்கு 299 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • ஒரு மாதத்திற்கு 319 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 379 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 56 நாட்களுக்கு 479 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 579 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 56 நாட்களுக்கு 539 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 649 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 84 நாட்களுக்கு 719 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 859 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 84 நாட்களுக்கு 839 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 979 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 365 நாட்களுக்கு 2899 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த டெய்லி டேட்டா பிளானிங் சேவைக்கான கட்டணம் தற்போது 3499 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • நாளொன்றிற்கு 19 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த 1ஜிபி டேடா சேவைக்கான கட்டணம் 22 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • மூன்று நாட்களுக்கு 39 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த 6ஜிபி டேடா சேவைக்கான கட்டணம் 48 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
    401 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த போஸ்ட்பெய்ட் விஐ மேக்ஸ் சேவைக்கான கட்டணம் 451 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 501 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த போஸ்ட்பெய்ட் விஐ மேக்ஸ் சேவைக்கான கட்டணம் 551 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 601 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த ஃபேமிலி போஸ்ட்பெய்ட் விஐ மேக்ஸ் சேவைக்கான கட்டணம் 701 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
  • 1001 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த ஃபேமிலி போஸ்ட்பெய்ட் விஐ மேக்ஸ் சேவைக்கான கட்டணம் 1451 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது

Also Read: ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் கொடுத்த ஷாக்.. ரிசார்ஜ் பிளான் அதிரடி உயர்வு!

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?