Watch Video: பிரபல ஹோட்டல் சாம்பாரில் கிடந்த எலி.. அதிர்ச்சி வீடியோ..!
Viral video: அகமதாபாதில் இருக்கும் பிரபல உணவகத்தில் ஒரு நபர் உணவை ஆர்டர் செய்துள்ளார், அந்த சாம்பாரில் இறந்து போன எலி இருந்துள்ளது. இந்த சம்பவம் பிரபல உணவகமான தேவி தோசை உணவகத்தில் நடந்துள்ளது. உடனடியாக அந்த நபர் அகமதாபாத் முனிசிபாலிட்டிக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அந்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்: சமீப காலமாக உணவகங்களில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பள்ளி, மனித விரல், புழு, கரப்பான் பூச்சி, எலி கிடப்பதும் அதனை வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் அடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அகமதாபாதில் இருக்கும் பிரபல உணவகத்தில் ஒரு நபர் உணவை ஆர்டர் செய்துள்ளார், அந்த சாம்பாரில் இறந்து போன எலி இருந்துள்ளது. இந்த சம்பவம் பிரபல உணவகமான தேவி தோசை உணவகத்தில் நடந்துள்ளது. உடனடியாக அந்த நபர் அகமதாபாத் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அந்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Also Read: வட கொரிய அதிபரை காரில் அழைத்துச் சென்ற ரஷ்ய அதிபர் புதின்.. வைரல் வீடியோ..!
இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு உணவகங்களில் இருந்து வீட்டிற்கு உணவை கொண்டு வந்து கொடுக்க பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் மக்கள் தொகைக்கு ஏற்றவாறும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறும் சர்வதேச உணவு முதல் உள்ளூர் உணவு வரை வழங்கப்படுகிறது. ஆனால் அப்படி உணவகங்களில் நாம் நம்பி வாங்கும் உணவின் தரம் எந்த அளவு உள்ளது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அந்த வகையில் அகமதாபாதில் இருக்கும் தேவி தோசை என்ற பிரபல உணவகத்தில் ஒருவர் உணவை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த சாம்பாரில் இறந்து போன எலி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பாரில் எலி கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவிற்கு பலரும் எதிர்மறை கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும், உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபர் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார மீறல்களைக் காரணம் காட்டி உணவகத்தின் உரிமையாளருக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்தினடம் பேசிய உணவு பாதுகாப்பு அதிகாரி பவின் ஜோஷி ஒரு வேண்டுகோளை விடுத்தார் “அகமதாபாத் கார்ப்பரேஷனின் அனைத்து வணிக ஆபரேட்டர்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவில் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இதனால் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும் ” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read: சர்வதேச யோகா தினம்.. ராணுவ வீரர்கள் முதல் மாணவர்கள் வரை யோகா செய்து அசத்தல்..