Wayanad Landslide: சோக கடலில் வயநாடு.. 350-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.. தொடரும் மீட்புப் பணிகள்! - Tamil News | wayanad landslide 358 dead in wayanad landslides deep search radars used to find survivors | TV9 Tamil

Wayanad Landslide: சோக கடலில் வயநாடு.. 350-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.. தொடரும் மீட்புப் பணிகள்!

Updated On: 

04 Aug 2024 07:37 AM

வயநாடு நிலச்சரிவு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி கனமழை பெய்தது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி உள்ளிட்ட இடங்கள் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்தகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Wayanad Landslide: சோக கடலில் வயநாடு.. 350-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.. தொடரும் மீட்புப் பணிகள்!

வயநாடு நிலச்சரிவு

Follow Us On

வயநாடு நிலச்சரிவு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி கனமழை பெய்தது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி உள்ளிட்ட இடங்கள் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்தகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்ததால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனார்கள். அதனால் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளன. தொடந்து இன்று 5வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தீயணைப்புத்துறையினர், வனத்துறை, ராணுவத்துறை, போலீஸ் துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்தும் 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர்.

Also Read: ஆடி அமாவாசை.. கேரளா உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. முழு விவரம்..

350-ஐ தாண்டிய உயிரிழப்பு:

சூரல்மலை – முண்டக்கை இடையேயான பாலம் உடைந்ததால் வெள்ளத்தை கடந்த ராணுவம், பேரிடர் மீட்புப் படையினரால் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சூரல்மலை, முண்டக்கையின் ஒரு பகுதியில மட்டுமே மீட்புப் பணிகள் ஈடுபட முடிந்தது. இதையடுத்து ராணுவத்தினர் தற்காலிக பெய்லி பாலத்தை இரவு பகலாக அமைத்து அவ்வழியாக மீட்பு வாகனங்களில் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 518 பேரில் 209 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காண்பதில் சீரமங்கள் உள்ளதாகவும், 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read: வயநாடு நிலச்சரிவு.. ஆய்வு மேற்கொண்ட நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி..

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக அரசும் 100 வீடுகளை கட்டித் தருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பலரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நிவாரண தொகையை வழங்கி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடை, சாப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு தன்னார்வலர்கள் அனைத்து வழங்கி வருகின்றனர். இன்னும் 200 பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலையில்,  உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version