Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு.. ஆய்வு மேற்கொண்ட நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி.. - Tamil News | wayanad landslide actor mohanlal inspected affected areas and gave rupees 3 crore as relief fund | TV9 Tamil

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு.. ஆய்வு மேற்கொண்ட நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி..

Published: 

03 Aug 2024 18:03 PM

கேராளாவில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்லுகலு உள்ளிட்ட பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது.

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு.. ஆய்வு மேற்கொண்ட நடிகர் மோகன்லால் ரூ.3 கோடி நிதியுதவி..

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடிகர் மோகன்லால்

Follow Us On

வயநாடு நிலச்சரிவு: கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்ட்து. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை நடிகர் மோகன்லால் நேரில் சென்று பார்வையிட்டார். பின் ரூ.3 கோடி நிதியுதவு வழங்கியுள்ளார். கேராளாவில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்லுகலு உள்ளிட்ட பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், அதில் சிக்கி உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: வரும் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கே தெரியுமா?

கேரளாவை உலுக்கி இந்த துயர சம்பவம், நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நொடி பொழுதில் நடந்த இந்த விபத்திற்கு 300-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் கூட தங்களது உறவுகளையும், குடும்ப உறுப்பினர்களையும் கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று நடிகர் மோகன்லால் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் கேரள அரசுக்கு ரூ. 3 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களோடு ராணுவ வீரர்கள் துணை நிற்பது தனக்கு ஆறுதல் அளிப்பதாக மோகன்லால் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சச்சினின் சிறப்பு பட்டியலில் இணைந்த ரோஹித்.. வார்னரை பின்னுக்கு தள்ளி அசத்தல்..!

இந்நிலையில் வயநாட்டில் நடந்த இந்த கோர சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன், ஜில்லும் நானும் கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களுக்காக இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது வேண்டுதல்கள் துணை நிற்கும், தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கும் என்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நிலச்சரிவில் சிக்கியவர்களை துரிதமாக மீட்ட, இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் தைரீயத்தை பாராட்டுகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version