Wayanad Landslide : 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! - Tamil News | Wayanad Landslide death toll increased to 107 and still rescue process going on | TV9 Tamil

Wayanad Landslide : 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

Updated On: 

30 Jul 2024 17:58 PM

Kerala Issue | கேரளாவின் இந்த பயங்கர நிலச்சரிவு நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அங்கு நிலமை மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

Wayanad Landslide : 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

கேரளா நிலச்சரிவு

Follow Us On

வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் இன்று (30.07.2024) அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாட்டின் மேப்படி , சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,

  • நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
  • சுமார் 5,500 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
  • 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்த மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
  • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்ப்புக்கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளார்.

அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்த நிலச்சரிவு

முன்னதாக இன்று அதிகாலை 2 – 3 மணிக்குள் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வினா ஜார்ஜ் தெரிவித்தார். அதுமட்டுமன்றி கேரளாவில் நிலமை தொடர்ந்து மோசமாக நீடிக்கிறது, உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என மாநிலத்தின் உயர்மட்ட அதிகாரி வி.வேணு ஊடகத்திடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Wayanand Landslide: வயநாடு நிலச்சரிவு.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்.. பிரதமர் மோடி அறிவிப்பு!

ரூ.5 கோடி நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு அரசு

கேரளாவின் இந்த பயங்கர நிலச்சரிவு நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், அங்கு நிலமை மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு.. நடந்தது என்ன? சிக்கித் தவிக்கும் மக்கள்..!

மண்ணில் புதைந்த வாகனங்கள்

கேரளா முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் வெள்ள நீர் காரணமாக மீட்பு பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதால்,  நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த வாகனங்களையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version