Wayanad Landslide : 282 பேர் உயிரிழப்பு.. மக்களை தேடும் மீட்புப்படை.. மனதை உலுக்கும் புகைப்படங்கள்! - Tamil News | Wayanad Landslide death toll increased to 282 and still rescue process going on | TV9 Tamil

Wayanad Landslide : 282 பேர் உயிரிழப்பு.. மக்களை தேடும் மீட்புப்படை.. மனதை உலுக்கும் புகைப்படங்கள்!

Updated On: 

01 Aug 2024 09:32 AM

Kerala Issue | கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜூலை 30 ஆம் தேதி வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்லுகலு உள்ளிட்ட பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

1 / 5வயநாடு

வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், ஜூலை 30 ஆம் தேதி வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்லுகலு உள்ளிட்ட பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

2 / 5

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்ணில் புதைந்துள்ள நூற்றுக்கணக்கானோரை 3வது நாளாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

3 / 5

கேரள சாலைகளில் 24 மணி நேரமும் செல்லும் ஆம்புலன்ஸ் : வயநாட்டில் அதிகாலை 2 முதல் 4 மணி அளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதால் அவர்களுக்கு என்ன்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்துள்ளது. வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை பெற்றுக்கொள்ள கூட உறவினர்கள் இல்லாத சோக சூழல் நிலவி வருகிறது. கேரளாவின் சாலைகளில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சென்றுக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கேரளா மீளா துயரில் ஆழ்ந்துள்ளது. 

4 / 5

இன்று அனைத்து கட்சிகள் கூட்டம்  : இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது வயநாடு துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, பேரிட்டர் நிவாரண நிதிக்கு அமைச்சர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5

வயநாடு விரையும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி : ஒட்டுமொத்த நாட்டின் கவனமே கேரளா பக்கம் திரும்பியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று கேரளாவிற்கு செல்ல உள்ளனர். மேலும் நிலசர்ரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் பினராயி விஜயன் நிவாரண உதவிகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இளம் பெற்றோரா நீங்கள்? - இதை கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!
நவம்பரில் உலகளவில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்!
நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஆல்பம்
வைரலாகும் ரம்யா பாண்டியனின் மேரேஜ் போட்டோஸ்