Wayanad Landslides: நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு.. உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு? - Tamil News | wayanad landslides kerala goverment announced rs 6 lakhs compensation to next kin of victims | TV9 Tamil

Wayanad Landslides: நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு.. உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு?

Updated On: 

14 Aug 2024 14:35 PM

Wayanad Landslide Compensation: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் நிவாரணம் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். முகாம்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ரூ.6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும்.

Wayanad Landslides: நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு..  உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு?

வயநாடு நிலச்சரிவு

Follow Us On

நிவாரணம் அறிவிப்பு: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் நிவாரணம் அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக கடந்த 30ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரவு ஏற்பட்டது. எதிர்பாராவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

Also Read: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்? அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

இந்த நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் நபரின் குடும்பத்தினர் தங்களின் உறவினர் தான் உயிரிழந்தார்கள் என உறுதிப்படுத்தினால் இழப்பீடு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு:

பேரிடரில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் இழப்பீட்டை பெற தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நிலச்சரிவில் காணாமல் போனவர்களின் பட்டியலை போலீசார் விரைவில் வெளியிடுவார்கள். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 118 என அவர் கூறியுள்ளார். நிலச்சரிவில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். முகாம்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ரூ.6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு 60 சதவீதம் உடல் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ.75,000, 50 சதவீதம் குறைபாடு ஏற்பட்டோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 401 பேரின் உடல்கள் மற்றும் உடல் உறுப்புகளின் டிஎன்ஏ சோதனை முடிவடைந்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். இதில் 121 ஆண்களும் 127 பெண்களும் அடங்குவர். 52 உடல் உறுப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. இதுவரை 115 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

Also Read: சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.. வரலாற்று உள்ளீடுகள் புரியும் என அராய்ச்சியாளர்கள் கருத்து!

தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்த குடும்பங்களுக்கும் அரசு அதே சலுகையை வழங்கும் என்றார். இருப்பினும், அரசு கட்டிடங்கள் மற்றும் சொந்த வீடுகளில் வசிப்போருக்கு நிவாரணம் பெற முடியாது. இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயுவை அரசாங்கம் இலவசமாக வழங்கும் என்றும் கூறியுள்ளார். பேரழிவில் முக்கியமான ஆவணங்களை இழந்த நபர்கள், கட்டணம் செலுத்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நகல் அல்லது புதிய சான்றிதழ்களைப் பெறலாம் என்று அவர் கூறினார்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version