5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wayanad By Election: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடுக்கு இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு எப்போது?

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Wayanad By Election: பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடுக்கு இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு எப்போது?
பிரியங்கா காந்தி (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Oct 2024 17:43 PM

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கேரளா மாநிலத்திற்கு ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவை தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6 லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

வயநாடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

இவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட ஆனி ராஜா 2 லட்சத்து 83 ஆயிரத்து 023 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுமார் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அதேநேரத்தில் 2021 மக்களவை தேர்தல் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Also Read: ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவுக்கு எப்போது தேர்தல்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியை எம்.பி பதவியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு எம்.பியை பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தனது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று ராகுல் காந்தி அறிவித்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.


இந்த நிலையில் தான், வயநாடு மக்களவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அக்டோபர் 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் அக்டோபர் 30ஆம் தேதியாகும்.

Also Read: மகளை கொலை செய்ய முடிவெடுத்த தாய்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

வயநாடு தேர்தல் களம்:

மக்களவை தேர்தலில் மிகவும் முக்கியமானது வயநாடு தொகுதி. குறிப்பாக 2019ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தொகுதியானயது வயநாடு. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டார். 2019ல் ராகுல் காந்தி 7,06,367 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியின் சுனீர் 2,74,597 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ராகுல் காந்தி சுமார் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் கேரளா காங்கிரஸுக்கு மிகமிக முக்கியமான தேர்தல் களமாகியுள்ளது.

Latest News