5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு.. நடந்தது என்ன? சிக்கித் தவிக்கும் மக்கள்..!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக முண்டகை பகுதிக்கு மீட்பு படையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு.. நடந்தது என்ன? சிக்கித் தவிக்கும் மக்கள்..!
வயநாடு நிலச்சரிவு
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 30 Jul 2024 17:23 PM

வயநாடு நிலச்சரிவு: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக அங்கு இருக்கும் மக்களில் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர் கனமழையால் வயநாடு, மலப்புரம், கன்னூர் ஆகிய பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து மீண்டும் 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மக்கள் தூங்கும் நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் நிலச்சரிவில் சிக்கி தவித்தனர். முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய கிராமங்கள் இந்த நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த மலைப்பகுதி முழுவதும் மண்ணில் புதைந்ததாகவும் இதில் ஏரளமான வீடுகள் மண்ணுக்குள் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவப் படை, தேசிய மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் என அனைவரும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது.. சர்ச்சைகளுக்கு மத்தியில் தட்டித்தூக்கிய போலீசார்..

இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக முண்டகை பகுதிக்கு மீட்பு படையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு சம்பவத்திற்கு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூ.5 கோடி நிதியுதவி தமிழ்நாடு அரசு தரப்பில் வழங்கப்படும் என தெரிவித்துளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், “ வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலையாளி சகோதரர்களின் துயரத்தில் தமிழகம் பங்கு கொள்கிறது. மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக ரூ.5 கோடி வழங்கப்படுகிறது. மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவையும் உடன் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றாக இணைந்து இந்த நெருக்கடியை சமாளிப்போம்” என தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், இடுக்கி முதல் காசர்கோடு வரையிலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் வடகேரளத்தில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

Latest News