“பாஜக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு” தமிழ்நாட்டை குறிப்பிட்ட மோடி.. நாடாளுமன்றத்தில் பரபர!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர், இக்கூட்டத்தில் பேசிய அவர், "தென்னிந்தியாவில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எங்களால் ஒரு எம்.பியை கூட பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சரியான பாதையில் தான் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது உதாரணம். முதல் முறையாக கேரளாவில் இருந்து ஒரு எம்.பி. வந்துள்ளார்" என்றார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று மோடியை மீண்டும் பிரதமராக்க ஆதரவளித்தனர். அதன் அடிப்படையில், பாஜக கூட்டணியின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதாக ஜெ.பி.நட்டா அறிவத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வரலாற்றில் இது மிகவும் வெற்றிகரமான கூட்டணியாகும். எங்கள் எல்லா முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே எங்கள் நோக்கம். 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழப்பு என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். நாங்கள் ஒருபோதும் தோல்வி அடைய மாட்டோம். எனக்கு நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் சமம். நம் கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மைப் பொறுத்தவரை அனைவரும் சமம்.
Also Read: மத்திய அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபு நாயுடு கேட்பது என்ன? வளைந்து கொடுக்குமா பாஜக?
கடந்த 30 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகவும் முன்னேறியதற்கும் இதுதான் காரணம். 10 ஆண்டுகளுக்கு பிறகும் லோக்சபா தேர்தலில் 100 இடங்களை காங்கிரஸால் பெற முடியவில்லை. 2014, 2019, 2024 தேர்தல்களில் பாஜக பெற்ற இடங்களை கூட ஒரு தேர்தலில் காங்கிரஸால் பெற முடியவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”தென்னிந்தியாவில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் மாநில அரசுகள் அமைக்கப்பட்டன.
ஆனால், மக்களின் நம்பிக்கை நொடிகளில் உடைந்தது. அவர்கள் ஒரு மாயையில் இருந்து வெளியே வந்து கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்றுக் கொண்டனர். தமிழகத்தில் எங்களால் ஒரு எம்.பியை கூட பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சரியான பாதையில் தான் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது உதாரணம். முதல் முறையாக கேரளாவில் இருந்து ஒரு எம்.பி. வந்துள்ளார்.
மக்கள் உங்களை அணுகி உங்களுக்கு அமைச்சரவையில் இடம் தரலாம் என்று சொல்வார்கள். இப்போது எனது கையெழுத்துடன் ஒரு பட்டியல் வெளிவரும் அளவுக்கு தொழில்நுட்பம் உள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை என்று கூறுகிறேன். அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த சதிகளுக்கு இரையாகி விடக்கூடாது. INDIA கூட்டணி இந்தத் தேர்தல்களில் போலிச் செய்திகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அவர்கள் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வதந்திகளில் இருந்து விலகி இருங்கள். ப்ரேக்கிங் நியூஸ் அடிப்படையில் நாடு ஒருபோதும் இயங்காது” என்றார்.
Also Read: வெற்றியை தொடர்ந்து ஹேப்பி நியூஸ்.. ராகுலுக்கு கிடைத்த ஜாமீன்.. என்ன மேட்டர்?