West Bengal : மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்ற மம்தா.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
Doctors Protest | கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
நீதி கேட்டு போராடிவரும் மருத்துவர்கள் : கொல்கத்தாவில் மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயிற்ச்சி பெண் மருத்துவரின் இறப்புக்கு நீதி வழங்க கோரி, 3 கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்ற மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களின் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : Today’s Top News Headlines: இன்று பதவி விலகுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவர்
கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் இறப்புக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. எந்தெந்த மாவட்டங்களில்? லிஸ்ட் இதோ!
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியும் போராட்டம் நடத்திவந்த மருத்துவர்கள்
இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதற்கிடையில், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டும் மருத்துவர்கள் பேராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையும் படிங்க : Coconut Oil Benefits: முகம் முதல் இதயம் வரை.. பராமரிப்பை அள்ளி தரும் தேங்காய் எண்ணெய்..!
மருத்துவர்களின் 3 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி
இதனை தொடர்ந்து நேற்று 5வது முறையாக மருத்துவர்களுக்கு கடைசி அழைப்பு விடுத்திருந்தார் மம்தா. மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று மருத்துவர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அப்போது மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால் இவற்றை செய்ய வேண்டும் என 5 நிபந்தனைகளை முன் வைத்தனர். இந்த நிலையில் மருத்துவர்களின் 5 நிபந்தனைகளில் 3 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி அவற்றை நிறைவேற்ற உடனடி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : Hospital Jobs: அரசு மருத்துவமனையில் எக்கச்சக்க வேலை.. 8ஆம் வகுப்பு படித்தாலே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!
மருத்துவர்களின் 3 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மம்தா
போராட்டத்தை கைவிட மருத்துவர்கள் முன்வைத்த 5 நிபந்தனைகளில் 3 நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டார். கொல்கத்த போலீஸ் கமிஷனர் நீக்கம் செய்யப்பட வேண்டும், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி அமைந்துள்ள நகரின் வடக்கு பகுதி போலீச் தலைமை அதிகாரி ஆகியோர் நீக்கம் செய்யப்பட வேண்டும் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சுகாதாரத்துறை அதிகாரிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று அனைவரையும் நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் மம்தா.
மம்தா பானர்ஜி கூறியது என்ன?
இந்தக் கூட்டம் நேர்மறையாக இருந்ததாக நினைக்கிறேன். உறுதியாக அவர்களும் அப்படி நினைப்பார்கள். மருத்துவர்களின் கோரிக்கைகள் 99% ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏனென்றால் அவர்கள் எங்களுடைய இளைய சகோதரர்கள். நாங்கள் சென்று ஆலோசனை நடத்தி அதன் பிறகு போராட்டத்தை கைவிடுவது பற்றி முடிவு செய்தோம் என அவர்கள் சொல்வார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு நோயாளிகளின் நிலையை காரணம் காட்டி அவ்வாறு செய்யுமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க : Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.