5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budhdhadeb Bhattacharjee : மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!

West Bengal ex CM | மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பாட்டாச்சார்யா. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை, சுமார் 11 ஆண்டு காலம் முதலமைச்சராக பதவி வகித்தார். கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான பட்டாச்சார்யா, அரசியலுக்கு வருவதற்கு முன்பாக பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

Budhdhadeb Bhattacharjee : மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!
புத்ததேவ் பாட்டாச்சார்யா
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Aug 2024 13:03 PM

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் காலமானார் : மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் கொல்கத்தாவில் உள்ளது தனது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

11 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்த புத்ததேவ் பட்டாச்சார்யா

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை, சுமார் 11 ஆண்டு காலம் முதலமைச்சராக பதவி வகித்தார். கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான பட்டாச்சார்யா, அரசியலுக்கு வருவதற்கு முன்பாக பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு அரசியலில் காலெடுத்து வைத்த அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு அவர் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பாட்டார். அதனை தொடர்ந்து சுமார் 11 ஆண்டுகள் அவர் முதலமைச்சராக பதவி வகித்தார்.

இதையும் படிங்க : Paris Olympics Day 12 Highlights: ஒலிம்பிக்கின் 12ம் நாள்..! வினேஷ் தகுதி நீக்கம் முதல் மீரா பாய் தோல்வி வரை!

புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு தலைவர்கள் இரங்கள்

இந்நிலையில் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தற்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக எனக்கு அவரை தெரியும். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் வீட்டிலே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது ஒரு சில முறை நான் அவரை சந்தித்தேன். இந்த துயரமான நேரத்தில் அவரது மனைவி மற்றும் மகனுக்கு என்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிபிஐ(எம்) கட்சி உறுப்பினர்களுக்கும் அவரை பின்பற்றுவோருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Vakbu Variyam : இன்று தாக்கலாகிறது வக்பு திருத்த வாரிய சட்ட மசோதா.. அதிகாரங்கள் பறிக்கப்படுமா?

பட்டாச்சார்யாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம்

மேலும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் இறுதி பயணம் மற்றும் சடங்குகளில் அவருக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என்றும் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கதில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News