West Bengal Election Exit Poll 2024: மேற்கு வங்கம் கருத்துக்கணிப்பு முடிவு என்ன? தகர்கிறதா மம்தா கோட்டை?

Lok sabha Elections Exit Poll 2024 Results : திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வீழ்ச்சி என ஆக்சிஸ் மை இந்தியா என்று கணித்துள்ளது. மம்தா பானர்ஜியின் கட்சிக்கு 11-14 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மேலும், ஆக்சிஸ் மை இந்தியா சர்வே பாஜக 46% வாக்குகளைப் பெறும் என்றும், 2019-ஐ விட 6% அதிகரிப்பு என்றும் கூறியுள்ளது.

West Bengal Election Exit Poll 2024: மேற்கு வங்கம் கருத்துக்கணிப்பு முடிவு என்ன?  தகர்கிறதா மம்தா கோட்டை?

மேற்கு வங்க தேர்தல் கருத்துக் கணிப்புகள்

Updated On: 

01 Jun 2024 22:42 PM

2024 மேற்கு வங்காள எக்ஸிட் போல் முடிவுகள்: மேற்கு வங்கத்தில் 42 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய ஏழு கட்டங்களாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தனது 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மீண்டும் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) 18 இடங்களை வென்றது. அதை தற்போது செய்ய விடக் கூடாது என்ற எண்ணத்தில் மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி (தீதீ) தீவிரமாக பணியாற்றினார். இந்த நிலையில் இன்று (ஜூன் 1,2024) வெளியான தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சரிவை சந்திக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.ஃ

கருத்துக் கணிப்பு முடிவுகள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வீழ்ச்சி என ஆக்சிஸ் மை இந்தியா என்று கணித்துள்ளது. மம்தா பானர்ஜியின் கட்சிக்கு 11-14 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மேலும், ஆக்சிஸ் மை இந்தியா சர்வே பாஜக 46% வாக்குகளைப் பெறும் என்றும், 2019-ஐ விட 6% அதிகரிப்பு என்றும் கூறியுள்ளது. தொடர்ந்து, டி.எம்.சி 40% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக 21 முதல் 26 இடங்களைப் பெறும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் 16 முதல் 18 இடங்கள் வரை குறையும் என்றும் தெரிவித்துள்ளது. பி-மார்க் கருத்துக்கணிப்பு கணிப்பு பிஜேபி 22 இடங்களிலும், டிஎம்சி 20 இடங்களிலும், காங்கிரஸ், சிபிஎம் அல்லது பிற கட்சிகளுக்கு ஒரு இடங்கள் இல்லை என்றும் கூறுகிறது.

டி.வி 9 மேற்கு வங்க தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

ரிபப்ளிக் எக்சிட் போல்ஸ் டிரெண்ட்ஸ், பாஜக 49% பெண்களின் வாக்குகளைப் பெறும் என்றும், காங்கிரஸ் 72% முஸ்லிம் வாக்குகளைப் பெறும் என்றும் கணித்துள்ளது.

இதையும் படிங்க : Delhi Exit poll 2024: டெல்லியில் இந்தக் கட்சிதான் கில்லி: TV9 எக்ஸி்ட் போல் ரிசல்ட்!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!