5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Waqf board : வக்பு வாரியம் என்றால் என்ன? அதிகாரங்கள், சட்டதிருத்த மசோதா குறித்த முழு விவரம்!

Bill Passed | வக்பு வாரியங்களின் அதிகாரங்களை குறைக்க வழிவகை செய்யும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை  நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் எதிப்புகளையும் மீறி வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Waqf board : வக்பு வாரியம் என்றால் என்ன? அதிகாரங்கள், சட்டதிருத்த மசோதா குறித்த முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Aug 2024 14:08 PM

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா : இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியங்களின் அதிகாரங்களை குறைக்க வழிவகை செய்யும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை  நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் எதிப்புகளையும் மீறி வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா என்றால் என்ன, ஏன் அதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வக்பு வாரியம் என்றால் என்ன? 

இந்தியா முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மசூதிகள், தர்காக்கல் மற்றும் மதராஸ்களின் பெயரில் இஸ்லாமியர்கள் தானமாக நிலம் வழங்கி வருகின்றனர். இவ்வாறு தானமாக வழங்கப்படும் நிலங்கள் தான், வக்பு வாரிய சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இதற்காக கடந்த 1954 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த 1958 ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டன. இந்த வக்பு வாரியங்கள் இஸ்லாமியர்களின் மசூதிகள் மற்றும் தர்காக்களை நிர்வகிக்கும் முறைகளை கண்காணிக்கும். அதுமட்டுமன்றி அந்த வழிபாட்டு தலங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துக்களையும் கண்காணிக்கும். இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு வக்பு வாரிய சொத்துக்கள் தொடர்பான விரிவான சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு சில் திருத்தங்களை கொண்டுவந்தது கொண்டுவந்தது.

இதையும் படிங்க : Budhdhadeb Bhattacharjee : மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!

பாஜக அரசு செய்துள்ள மாற்றங்கள் என்ன என்ன?

இந்நிலையில் கடந்த 1954 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத்தில், திருத்தங்களை மேற்கொண்டு பாஜக அரசு மசோதா தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதாவில் வக்பு வாரியம் உரிமை கோரும் சொத்துக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்படும், இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தவரும் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இடம் பெறலாம், வக்பு வாரியத்தில் கணிசமான அளவு இஸ்லாமிய பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : Independence Day 2024: இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைந்த வேலூர் சிப்பாய் புரட்சி… நடுநடுங்கிய ஆங்கிலேயர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள வக்பு வாரியங்கள்

தமிழ்நாட்டில் சுமார் 70,000 வக்பு வாரிய சொத்துக்கள் உள்ளன. அதாவது சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவுக்கு வக்பு வாரிய சொத்துக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மசூதிகள், தர்காக்கள் உள்ளிட்ட சுமார் 7000-க்கு அதிகமான வக்பு வாரிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றை தமிழ்நாடு வக்பு வாரியம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News