ரூ.3.3 லட்சம் சம்பளம்.. அரசு பங்களா..எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கிடைக்கும் சலுகைகள்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பங்கு மிகவும் முக்கியமானது. நாடாளுமன்றத்தில் அனைத்து எதிக்கட்சிகளின் குரலாக மாறுவது மட்டுமல்லாமல் அவருக்கென சொந்த அதிகாரமும் சலுகைகளும் உள்ளன. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் சம்பளம் மற்றும் படிகள் சட்டம் 1977-ன்படி, அவருக்கு சம்பளம் மற்றும் பல சலுகைகள் அதிகாரிகள் வழங்கப்படும். நாடாளுமன்ற விதிகளின்படி சபாநாயகர் இருக்கைக்கு இடதுபுறத்தில் முதல் வரிசையில் முதல் இருக்கை எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்படும்.

ரூ.3.3 லட்சம் சம்பளம்.. அரசு பங்களா..எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கிடைக்கும் சலுகைகள்!

ராகுல் காந்தி

Updated On: 

27 Jun 2024 13:36 PM

ராகுல் காந்தி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வாகி உள்ளார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவைக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவில்லை. பொதுவாக, மக்களவையில் எந்த கட்சி 10 சதவீத இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சிக்கே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு ஒரு எதிர்க்கட்சிக்கு குறைந்தபட்சம் 55 இடங்கள் தேவை. கடந்த 2014 தேர்தலில் 44 இடங்களிலும், 2019 தேர்தலில் 52 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கவில்லை. ஆனால், 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியதால் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனப் பதவியை ராகுல் காந்தி ஏற்றுள்ளார்.

Also Read: திருமணம் செய்ய மணப்பெண்ணை தேடி தாருங்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்..!

நேரு குடும்பத்தில் மூன்றாவது நபர்:

ஐந்து முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ள ராகுல் காந்தி, அமேதி, வயநாடு, ரேபரேலி ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கடந்த 2004 தேர்தலில் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் முதன்முதலில் மக்களவை உறுப்பினரானார். இதுவரை ஒருமுறை மட்டுமே தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அதாவது, 2019 தேர்தலில் அமேதியில் தொதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், வயநாடு தொகுதி மூலம் மக்களவைக்கு சென்றார்.  நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவத நபருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது. ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி கடந்த 1989 முதுல் 1990ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். தாய் சோனியா காந்தி கடந்த 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்திருக்கிறார்.

ராகுல் காந்திக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பங்கு மிகவும் முக்கியமானது. நாடாளுமன்றத்தில் அனைத்து எதிக்கட்சிகளின் குரலாக மாறுவது மட்டுமல்லாமல் அவருக்கென சொந்த அதிகாரமும் சலுகைகளும் உள்ளன. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் சம்பளம் மற்றும் படிகள் சட்டம் 1977-ன்படி, அவருக்கு சம்பளம் மற்றும் பல சலுகைகள் அதிகாரிகள் வழங்கப்படும். நாடாளுமன்ற விதிகளின்படி சபாநாயகர் இருக்கைக்கு இடதுபுறத்தில் முதல் வரிசையில் முதல் இருக்கை எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்படும். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மேடைக்கு அழைத்துச் செல்வது போன்ற முக்கிய நிகழ்வுகளின் எதிர்க்கட்சி தலைவரின் பங்கு பெரிதாக கருதப்படுகிறது. . நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தும் போது முன் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு கேபினட் அமைச்சருக்கு நிகரான அரசு பங்களா கிடைக்கும்.

சம்பளம் மற்றும் அலவன்ஸை பொறுத்தவரை, ராகுல் காந்திக்கு கேபினட் அமைச்சருக்கு இணையாக வழங்கப்படும். அதாவது, மாதம் ரூ.3.3 லட்சம் சம்பளம் வழங்கப்படும். அவருக்கு கேபினட் அமைச்சர் அளவிலான பாதுகாப்பும் கிடைக்கும். அதில் Z+ பாதுகாப்பு ராகுல் காந்தி வழங்கப்படலாம். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் மூவர் குழுவில் ராகுல் காந்தி இப்போது இடம் பெறுவார்.

அதாவது, பிரதமர் மோடி, பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய மூவர் குழுவே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும். இந்த மூன்று பேர் கொண்ட குழுவில் பெரும்பான்மையாக எடுக்கும் முடிவு இறுதி செய்யப்படும். இருப்பினும், மக்களவையில் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் இரு உறுப்பினர்களின் முடிவை எதிர்க்கட்சி தலைவரிடம் திணிக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவர் எடுக்கும் முடிவுக்கு இரு உறுப்பினர்கள் சேவி சாய்க்க வேண்டிய நிலை உள்ளது. சிபிஐ, மத்திய அமைப்புகளின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உறுப்பினராக ராகுல் காந்தி இடம்பெறுவார்.

பிரதமர் மோடி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவே இவர்களை தேர்வு செய்வார்கள். இதில் ராகுல் காந்திக்கு அதிக அதிகாரங்கள் இருக்கிறது. பிரதமர் மோடி, இந்திய தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவே தேர்வு செய்யும் முடிவு இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மருத்துவமனையில் சிகிச்சை.. எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு?

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?