5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“பிரதமர் மோடியுடன் எப்போதும் இருப்பேன்” என்.டி.ஏ கூட்டத்தில் நிதிஷ் குமார் பேச்சு!

டெல்லியில் நடந்த என்டிஏ கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், "எங்கள் கட்சி ஜனதா தளம் மோடி பிரதமராவதற்கு உறுதுணையாக இருக்கும். கடந்த 10 ஆண்டுளாக பிரதமராக இருந்தவர் மீண்டும் பிரதமர் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் நல்ல விஷயம். நாங்கள் அனைவரும் உங்களுடன் (பிரதமர் மோடி) இணைந்து செயல்படுவோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்க உள்ளீர்கள். ஆனால் இன்றே நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். நீங்கள் உறுதிமொழி எடுக்கும் போதெல்லாம் நாங்கள் உங்களுடன் இருப்போம்” என்றார்.

“பிரதமர் மோடியுடன் எப்போதும் இருப்பேன்” என்.டி.ஏ கூட்டத்தில் நிதிஷ் குமார் பேச்சு!
நிதிஷ் குமார்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jun 2024 18:29 PM

டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் என்டிஏ தலைவராக மோடியை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் முன்மொழிய அனைவரும் அதை வழிமொழிய மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், இந்த கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், “நான் எப்போதும் மோடியின் பக்கம்தான் நிற்கிறேன். இந்தியா கூட்டணி நாட்டிற்கு அர்த்தம் உள்ள வகையில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை.

எங்கள் கட்சி ஜனதா தளம் மோடி பிரதமராவதற்கு உறுதுணையாக இருக்கும். கடந்த 10 ஆண்டுளாக பிரதமராக இருந்தவர் மீண்டும் பிரதமர் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் நல்ல விஷயம். நாங்கள் அனைவரும் உங்களுடன் (பிரதமர் மோடி) இணைந்து செயல்படுவோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்க உள்ளீர்கள். ஆனால் இன்றே நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். நீங்கள் உறுதிமொழி எடுக்கும் போதெல்லாம் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

Also Read: வெற்றியை தொடர்ந்து ஹேப்பி நியூஸ்.. ராகுலுக்கு கிடைத்த ஜாமீன்.. என்ன மேட்டர்?

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம், ஜக்கிய ஜனதா ளதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியை அமைக்க உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 16 எம்.பிக்களுடன் தெலுங்கு தேசம் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேபோல, 12 எம்.பிக்களுடன் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளன. இவர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதனை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.

மேலும், மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளைப் போல இல்லாமல் மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. 13 சிட்டிங் அமைச்சர்கள் தோல்வி அடைந்து இருப்பதால், ஏன்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிகிறது. குறிப்பாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டு பெற இருகட்சிகளும் முனைப்பு காட்டி வருகிறது. எனவே, நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவி கிடைக்குமா? சந்திரபாபு நாயுடுவின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்து வருகிறது.

Also Read: “பாஜக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு” தமிழ்நாட்டை குறிப்பிட்ட மோடி.. நாடாளுமன்றத்தில் பரபர!

Latest News