Sitaram yechury: இந்தியாவின் காம்ரேட்.. மாணவர் சங்கம் டூ தேசிய அரசியல்.. யார் இந்த சீதாராம் யெச்சூரி? - Tamil News | who is sitaram yechury a lifelong marxist leader and protest against indira gandi emergency jnu in tamil | TV9 Tamil

Sitaram yechury: இந்தியாவின் காம்ரேட்.. மாணவர் சங்கம் டூ தேசிய அரசியல்.. யார் இந்த சீதாராம் யெச்சூரி?

Updated On: 

12 Sep 2024 18:11 PM

சீதாராம் யெச்சூரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) இன்று காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இவரது அரசியல் வாழ்க்கை என்னவென்று பார்ப்போம்.

Sitaram yechury: இந்தியாவின் காம்ரேட்.. மாணவர் சங்கம் டூ தேசிய அரசியல்.. யார் இந்த சீதாராம் யெச்சூரி?

சீதாராம் யெச்சூரி (photo credit: PTI)

Follow Us On

சீதாராம் யெச்சூரி காலமானார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) இன்று காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இவரது அரசியல் வாழ்க்கை என்னவென்று பார்ப்போம். சென்னையில் 1952ஆம் ஆண்டு பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். இவர் பள்ளி படிப்பை காக்கிநாடாவில் முடித்தார். சீதாராம் யெச்சூரி மாணவப் பருவத்திலேயே தெலுங்கானா இணைந்தார். 1969ஆம் ஆண்டு வரை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். ஹைதராபாத்தில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, கல்லூரி படிப்பிற்காக 1969ஆம் ஆண்டு டெல்லிக்குச் சென்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். டெல்லி ஐவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Also Read: சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

எமெர்ஜென்சியை எதிர்த்தவர்:

ஜூன் 25 1975 அன்று இந்திரா காந்தி அவசரநிலையை அறிவித்தார். அப்போது யெச்சூரி ஜேஎன்யுவில் படித்துக் கொண்டிருந்தார். இந்திரா காந்தி அறிவிக்கப்பட்ட அவசரநிலையை தீவிரமாக எதிர்த்தார். அவசரநிலையை எதிர்த்து ஐக்கிய மாணவர் கூட்டமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் இல்லத்திற்கு பேரணியாக சென்றது. இதற்கு சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கினார்.

அப்போது, இந்திரா காந்தி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தார். இதனால், சர்வாதிகாரி ஒருவர் பல்கலைகழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கக் கூடாது வலியுறுத்தி யெச்சூரி பேரணி நடத்தினார். இறுதியில் இந்திரா காந்தி ஜேஎன்யுவின் வேந்தர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு, சீதாராம் யெச்சூரி அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவசரநிலைக்குப் பிறகு, யெச்சூரி 1977 மற்றும் 1978ஆம் ஆண்டுக்கு இடையில் மூன்று முறை ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜ்யசபா எம்.பி:

1984ஆம் ஆண்டில் சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். சீதாராம் யெச்சூரில் 2005ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பியாக இருந்தார். இதில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பல முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வந்தார்.  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று இந்த முறையும் மூன்றவாது முறையாக அந்த பொறுப்பை அவர் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் இரங்கல்:

இப்படிப்பட்டவரின் மறைவு அரசியல் தலைவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.   இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  தனது எக்ஸ் தளத்தில், ”இடதுசாரி இயக்கத்தின் தலைவரும், இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு அதிர்ச்சியையும் வருதத்தையும் அளிக்கிறது.

மாணவர் பருவத்திலேயே அச்சமற்ற தலைவராக அவசர நிலை சட்டத்துக்கு எதிராக நின்றவர். தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, முற்போக்கான விழுமியங்களுக்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read: ரஷ்யா உக்ரைன் போர்.. இந்திய பொருளாதாரம் சந்தித்த மறைமுக சிக்கல்கள் என்ன?

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நமது நாட்டை பற்றி ஆழமான புரிதலை கொண்டிருந்தார். இநிதியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதில் அக்கறையும் கொண்டிருந்தார். அவருடனான நீண்டகால தொடர்பை இழந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version