5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Delhi CM: டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் 5 தலைகள்.. யார் இவர்கள்?

டெல்லி முதல்வர்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமன அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவை நடைபெறும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Delhi CM: டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் 5 தலைகள்.. யார் இவர்கள்?
கெஜ்ரிவால்-அதிஷி – ராகவ் சதா (Image Credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Sep 2024 14:56 PM

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமன அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் டெல்லி அரசியில் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைமையகத்தில் முதல்வர் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், கட்சியின் பிற மூத்த தலைவர்கள் இணைந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.  அப்போது டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அடுத்த 2 நாட்களில் ராஜினாமா செய்கிறேன் என்றும் மக்கள் எனக்கு நேர்மை சான்றிதழ் கொடுத்த பிறகு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றார்.

டெல்லியின் அடுத்த முதல்வர்:

வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவை நடைபெறும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதில் மூன்று பேரின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. அதாவது, கெஜ்ரிவால் சிறையில் இருக்கும்போது பல்வேறு பொறுப்புகளை கவனித்து வந்த பெண் அமைச்சர் அதிஷியும், அமைச்சர்களாக இருக்கும் கோபால் ராய், இம்ரான் ஹூசைன், கைலாஷ் கெலாட், சவுரப் ப்ரத்வாஜ் ஆகியவர்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, பெண் அமைச்சர்  அதிஷி முதல்வராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு..

அதிஷி:

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அதிஷி. கெஜ்ரிவால் சிறையில் சென்ற பிறகு செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர். கெஜ்ரிவால் சிறையில் இருக்கும்போது பல்வேறு பொறுப்புகளை கவனித்து வந்தார். கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவியான இவர், டெல்லி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தியதில் முக்கிய பங்காற்றியவர். கல்காஜி  எம்.எல்.ஏவான இவர், மதுபான கொள்கை வழக்கில் அப்போது துணை முதலமைச்சராக இருந்து மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் அமைச்சரானார். கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் சிறையில் இருந்தபோது கட்சி பணிகளை கவனித்தார். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின நிகழ்வில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கான பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.  இதன் மூலம் அதிஷி எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பது புரிந்து கொள்ள முடியும்.  எனவே, இவர் முதல்வராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சௌரப் பரத்வாஜ்:

இவர் டெல்லி ஆம் ஆத்மி கட்சியில் அமைச்சராக உள்ளார். விஜிலென்ஸ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுபானக் கொள்கை வழக்கில் திரு சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, இவர் அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த காலத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி இருந்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் உள்ள அவர், ஊழல் வழக்குகளில் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்ட பின்னர், டெல்லி அரசாங்கம் மற்றும் கட்சி பணிகளை வழி நடத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். எனவே, இவரும் முதல்வராக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ராகவ் சதா:

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராக உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். கட்சியின் முக்கிய முகங்களில் இவரும் ஒருவர்.  பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த இவர், ஆம் ஆத்மி கட்சியின் தொடக்கத்தில் இருந்தே பணியாற்றி வருகிறார்.  2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 35 வயதான அவர் நாட்டின் மிக முக்கியமான இளம் அரசியல்வாதிகளில் ஒருவர் மற்றும் பாராளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஆம் ஆத்மியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர்.

Also Read: கூட்டு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்!

கைலாஷ் கெஹ்லோட்:

இவர் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இரண்டிலும் பயிற்சி பெற்ற வழக்கறிஞர். அவர் 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுக்கு இடையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினர் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். தற்போது போக்குவரத்து மற்றும் நிதித்துறை அமைச்சராக உள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். முதல்வர் பதவிக்கு இவரது பெயரும் அடிப்பட்டு வருகிறது.

சஞ்சய் சிங்:

2018 ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் மிக முக்கியமான முகங்களில் ஒருவர். நாடாளுமன்றத்தில் உற்சாகமான பேச்சுகளுக்கு பெயர் பெற்றவர். 52 வயதான இவர் சுரங்கப் பொறியியலில் டிப்ளமோ பெற்றவர்.  டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்திருக்கிறார். முக்கியப் பிரச்னைகளில் கட்சியின் நிலைப்பாட்டை வெளிபடுத்தி வருகிறார். இவர் கட்சியின் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவர் மற்றும் அதன் தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். இவரது பெயரும் முதல்வர் லிஸ்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

Latest News