5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“இப்ப ஏன் அதானி பத்தி பேசாம இருக்கீங்க?” பிரதமர் மோடி அட்டாக்!

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதானி, அம்பானி குறிந்து விமர்சிப்பதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“இப்ப ஏன் அதானி பத்தி பேசாம இருக்கீங்க?” பிரதமர் மோடி அட்டாக்!
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 May 2024 14:47 PM

அதானி குறித்து முதல்முறையாக வாய் திறந்த பிரதமர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மே 14ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால்,  அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இதன்பின், க்ரீம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதானி, அம்பானி குறிந்து விமர்சிப்பதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்று  பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also Read : கொட்டும் கோடை மழை..அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்..எந்தெந்த மாவட்டங்கள்?

எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது?

இதுகுறித்து பேசிய அவர், ”கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) ஒன்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். ரஃபேல் விவகாரம் கைகொடுக்கவில்லை என்றதும் புதிய முழக்கத்தைத் தொடங்கினார்.

ஐந்து ஆண்டுகளாக அம்பானி, அதானி குறித்து முழக்கமிட்டிருந்தார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அம்பானியையும் அதானியையும் பற்றி பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்.

ஏதோ தவறாக உள்ளது. நீங்கள் அம்பானி, அதானி பற்றி ஐந்து வருடங்களாக விமர்சித்து வந்தீர்கள். பின்னர் அது ஒரே இரவில் நிறுத்தப்பட்டது ஏன்? எவ்வளவு கறுப்புப் பணம் உள்ளது? காங்கிரசுக்கு டெம்போக்கள் நிரம்பியதா? போடப்பட்ட ஒப்பந்தம் என்ன? ஒரே இரவில் அம்பானி-அதானியை அசிங்கப்படுத்துவதை ஏன் நிறுத்தினீர்கள்? என்று சொல்லுங்கள்” என்றார் பிரதமர் மோடி.

“இனவெறி மனநிலையை நாங்கள் ஏற்க மாட்டோம்”

தொடர்ந்து பேசிய அவர், “இன்று நான் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இன்று நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். என்னை துஷ்பிரயோகம் செய்தால் கோபப்பட மாட்டேன்.

ஆனால், என் மக்களை துஷ்பிரயோகம் செய்தால் பொறுத்துக்கொள்ள முடியாது. நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் தகுதியை தீர்மானிக்க முடியுமா? ஒருவரின் நிறம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்களும் மனிதர்கள் தான்.

Also Read : திண்டாடும் பொருளாதாரம்..”தயவு செய்து வாங்க..” இந்தியர்களிடம் கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!

அரசியல் சாசனத்தை தலைக்கு மேல் வைத்திருக்கும் நபர்கள் நிறத்தின் அடிப்படையில் மக்களை அவமதிக்கிறார்கள். எனது மக்களை அப்படிக் கேவலமாகப் பார்க்க யார் அனுமதித்தார்கள் ? இந்த இனவெறி மனநிலையை நாங்கள் ஏற்க மாட்டோம்.

ஜனாதிபதி திரௌபதி முர்முவும் பழங்குடியினர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைத் தோற்கடிக்க காங்கிரஸ் கடுமையாக முயற்சிக்கிறது. 2014-ல் பாஜகவுக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தபோது, ​​பட்டியிலன குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தைத் தந்தோம். மீண்டும் 2019-ல் திரௌபதி முர்மு என்ற பழங்குடியின குடியரசுத் தலைவரை நாட்டுக்குக் கொடுத்தோம்” என்றார் பிரதமர் மோடி.

Latest News