நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

Parliament Session: மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (நவம்பர் 25) காலை 11 மணி அளவில் தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், வக்பு திருத்தம், அதானி விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாரிக்க உள்ளனர்.

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

நாடாளுமன்றம் (picture credit : PTI)

Updated On: 

24 Nov 2024 21:19 PM

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (நவம்பர் 25) காலை 11 மணி அளவில் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று காலை அனைத்துக் கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமுன்ற கூட்டத்தொடர் அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், இக்கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ரிஜிஜு அழைப்பு விடுத்தார். அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்

இக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, ஜெயராம் ரமேஷ், திருச்சி சிவா மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் அசாதாரண நிகழ்வுகள் நடந்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மகாராஷ்ராவில் பாஜக கூட்டணி மகாத்தான வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

அதே நேரத்தில் ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. மேலும், யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலுமாக திரும்பி விட்டது என்று கூற முடியாது. அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்வதோடு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Also Read : ஹேமந்த் சோரன் 4.0.. முதல்வர் பதவியேற்பு விழா.. ஒன்று திரளும் I.N.D.I.A கூட்டணி!

எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

ரத்து செய்யப்பட்ட 370-வது சட்டப்பிரிவை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மணிப்பூர் கடந்த சில நாட்களாகவே வன்முறை தீவிரமாகி உள்ளது. மணிப்பூரில் சுமார் 20 மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது.

இதனால் பிரேன்சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு வராதது ஏன் என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் முக்கியமான வக்பு சட்டத்திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என்று கூறப்படுகிறது. வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பணியை கிட்டதட்ட பூர்த்தி செய்த நிலையில், பிரந்துரைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

வக்பு திருத்தம் முதல் அதானி விவகாரம் வரை

இதன் மூலம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்வு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதியாக தெரிகிறது. மேலும், சுமார் 15 மசோதாக்களை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம். அதாவது, பிரதமர் மோடிக்கு நெருக்கான தொழிலதிபர் கவுதம் அதாணி.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர் (ரூ.2,100 கோடி) லஞ்சம் கொடுத்ததாக , இந்த லஞ்ச பணத்துக்காக தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்க அரசு குற்றச்சாட்டியுள்ளது.

எனவே இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தயாராகி உள்ளனர்.
அதாவது, மணிப்பூர் விவாகரம், அதானி விவகாரம், வக்பு திருத்தம், சாதிவாரி கணக்கெடுப்பு, வடமாநிலங்களில் ஏற்படும் காற்று மாசு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : உத்தர பிரதேசத்தில் பதற்றம்.. அதிகாரிகள் மீது கல்வீச்சு.. மசூதியில் ஆய்வுக்கு சென்றபோது மோதல்!

எதிர்க்கட்சிகள் கோரிய விவாதங்களை அரசு அனுமதிக்காவிட்டால் கடும் எதிர்ப்பை பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் அமளி உச்சம் பெற்றால் கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நீடிக்காது. அதற்கு முன்பாகவே கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!