5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஷமாக மாறிய மோமோஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோமோஸ் சாப்பிட்ட 33 வயதான பெண் உயிரிழந்த நிலையில், 22 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷமாக மாறிய மோமோஸ்..  பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!
மோமோஸ் சாப்பிட்ட உயிரிழந்த பெண் (picture credit: Twitter)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Oct 2024 12:31 PM

ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே பல பிரச்னைகள் உடலில் ஏற்படுகின்றன. இதில், சாலையோரங்களில் விற்கும் பானி பூரி, ஃபிரைடு ரைஸ், சவர்மா போன்றவற்றை சாப்பிடுவதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சமீப காலமாகவே பானி பூரி, நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விஷமாக மாறிய மோமோஸ்

தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் மோமோஸ் மிகவும் பிரபலமானது. சைவம், அசைவம் என இருதரப்பினரிடம் விரும்பிக் சாப்பிடக்கூடிய ஒன்று மோமோஸ்.

சின்னர், பன்னீர், ஃப்ரைடு மோமோஸ் என பல வகைகளில் கிடைக்கும் மோமோஸை சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் சாப்பிடுகின்றனர்.  இது முழுக்க மைதாவில் செய்யப்படுகிறது. இது சாப்பிடுவதால் எண்ணற்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

இந்த நிலையில், மோமோஸ் சாப்பிட்ட  இளம்பெண் உயிரிழந்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர் 33 வயதான ரேஷ்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சாலையோர கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

Also Read : பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? தீபாவளி நாளில் காத்திருக்கும் பரிசு!

பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்

சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரது பெற்றோர் உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டிருக்கிறது.

இதனால், அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் வாங்கிய அதே கடையில் மோமோஸ் சாப்பிட்ட  20க்கும் மேற்பட்டோருக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

33 வயதான ரேஷ்மா என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து, காவல்நிலையத்தில் அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரித்த போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் மோமோஸ் கடை நடத்தி வந்துள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக நடத்தி வந்தனர்.

அந்த கடையில் மோமோஸ் சாப்பிட்ட உயிரிழந்ததை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தியதில் முறையான உரிமம் இல்லாமல் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வுக்காக உணவு மாதிரிகளை சேகரித்து அந்த கடையை மூடியுள்ளனர்.

Also Read : 2025-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 2028ல் தென் மாநிலங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்:

இதுகுறித்து பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய அதிகாரி கூறுகையில், “மோமோஸ் சாப்பிட்டதால் ரேஷ்மா என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

உணவுப் பாதுகாப்பு உரிமம் ஏதுமின்றி விற்பனையாளர் செயல்பட்டு வந்ததும், சுகாதாரமற்ற நிலையில் உணவு தயாரிக்கப்படுவதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மோமோஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மாவு பேக் செய்யப்படாமல் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

மேலும் குளிர்சாதன பெட்டியின் கதவு சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. உணவு விற்பனையாளரிடமிருந்து மாதிரிகள் ஆய்வக ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விற்பனையாளரின் உரிமையாளருக்கு விற்பனை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மோமோஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?

மோமோஸில் மைதா அதிமாக சேர்க்கப்படுகிறது. மைதா அதிகமாக சாப்பிடும்போது செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். அஜீரணம், மலச்சிக்கல் போன்றவறை ஏற்படலாம். உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து மோமோஸ் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

மோமோஸில் அதிக சோடியம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். மேலும், மோமோஸ் சாப்பிடுது உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு, டைப் 2 நீரிழிவு நோய்களும் வரலாம். மேலும், அஜினோமோட்டோ மற்றும் பிற உணவு சேர்க்கைகள் கலக்கப்படுவதால் புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Latest News