Crime News: பெண் போலீஸ் வெட்டிக் கொலை.. கணவர் செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்!
கேரளாவில் பெண் போலீசை அவரது கணவரே சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை வீட்டில் இருந்த பெண் போலீஸை அவரது கணவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
கேரளாவில் பெண் போலீசை அவரது கணவரே சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (38). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யஸ்ரீ (34). இவர் சந்தேரா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 12 வயதில் ஆஷிஷ் என்ற மகன் உள்ளார். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், திவ்யாஸ்ரீயும் அவரது கணவர் ராஜேஷும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று ராஜேஷ் மாமனார் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பெண் போலீஸ் வெட்டிக் கொலை
அப்போது, திவ்யாஸ்ரீக்கும், ராஜேஸிற்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், மனைவி திவ்யாஸ்ரீயை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இவர் மாமனார் வீட்டிற்கு சென்றபோது கத்தியை மறைத்து வைத்து இருந்தார்.
அப்போது வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரத்தில் மனைவியை தான மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் திவ்யாஸ்ரீ கிடந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை வாசு தடுக்க முயன்றார்.
ஆனால், அவரையும் ராஜேஷ் வெட்டியுள்ளார். இதில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இரண்டு பேரையும் வெட்டிவிட்டு ராஜேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் திவ்யாஸ்ரீ மற்றும் அவரது தந்தையை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Also Read : “பாஜகவுக்கு ஆதரவா?” தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. கால்வாயில் உடல் வீச்சு!
மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் திவ்யாஸ்ரீ உயிரிழந்ததாக கூறினர். மேலும், அவரது தந்தை வாசுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவி திவ்யாஸ்ரீயை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
மனைவியை சரமாரியாக கணவன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.
Also Read : பழங்குடி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. மலத்தை சாப்பிட வைத்த கொடூரம்… ஷாக்!
குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் தான் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கடுமையான சட்டங்களும் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், கொலை, வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எனவே, இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.